2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மலையகத் தியாகி சிவனு லெச்சுமணனின் நினைவு தினம்

Editorial   / 2019 மே 10 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

 

மலையக மண்மீட்புப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகி டெவோன் சிவனு லெச்சுமணனின் நினைவு தினம், சனிக்கிழமை  (11) அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அன்றையத் தினம், மலையக மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் இன்னுயிர் ஈந்த அத்தனைத் தியாகிகளையும் நினைவில்கொள்ளவுள்ளதாக, ஈரோஸ் அமைப்பின் கொள்கைப்பரப்புச் செயலாளர் இரா.ஜீவன் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர், “1970களில் மலையக மக்களின் வாழ்வாதாரத்தின் உறைவிடமான மலையகப் பெருந்தோட்டங்களில் திட்டமிட்ட குடியேற்றங்களுக்காக, பல்லாயிரம் ஏக்கர் காணிகள் சுவிகரிக்கப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

நுவரெலியா மாவட்டத்தில், சுமார் 7,000ஆயிரம் ஏக்கர் தேயிலை காணிகளைக் கையகப்படுத்தும் திட்டத்துடன் அதில் ஒரு பகுதியாக 1977ஆம் ஆண்டு மே 11ஆம் திகதி, தலவாக்கலை டெவோன் தோட்ட தேயிலை விளைநிலைத்தை சுவிகரிக்கும் எண்ணத்தோடு அரச அதிகாரிகள் நிலைத்தைப் பிரிக்க முற்பட்டபோது, அதை தடுத்து நிறுத்துவதற்கு டெவோன் தோட்ட மக்களோடு அக்கம் பக்கம் தோட்ட மக்களனைவரும் வர்க்கமாக கைகோர்த்துக்கொண்டு தீரத்துடன் போராட்டத்தில் குதித்தினர்.

அந்த சுய எழுச்சிப் போராட்டத்தில் வட்டகொடை யொக்ஸ்போர்ட் தோட்ட இளைஞனான சிவனுலச்சுமனும் இணைந்துகொண்டிருந்தார்.

மலையகப் பாட்டாளிகளின் ஜனநாயகப் போராட்தைத் துப்பாக்கிவேட்டுகளால் அடக்க முற்பட்டபோது, பாதுகாப்புப் படைகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு சிவனு லெச்சுமணன் இரையாகினார்.

அவரின் மரணம் மலையகம் தழுவியளவில் உணர்வெழுச்சியை ஏற்படுத்தியது.

தியாகி சிவனுலெச்சுமணன் தண்ணுயிர் ஈந்து ஏற்படுத்திய எழுச்சியே, மலையக தேயிலை விளைநிலம் பறிபோவதைத் தடுத்து நிறுத்தியதோடு அதற்கு கிட்டிய காலத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 1947க்கு பின் முதல் முறையாக அரசியல் பிரதிநிதித்துவமொன்றை பெற்றுக்கொள்வதற்கும் வழியேற்படுத்தியது.

1977க்கு முன்பும் பின்பும் மலையக மக்களுக்களின் ஆரோக்கியமான வாழ்வியல் சூழலுக்கும் உரிமைக்குமான போராட்டத்தில், முல்லோயா கோவிந்தன், கொட்டியாகலை பிரான்சிஸ், ஐயாவு டயகம, கிழக்கு ஏப்பிரகாம் சிங்கோ, வேலாயுதம் போன்ற பலர் தங்களின் உயிரை ஈகம் செய்துள்ளார்கள்.

மலையக மக்களின் விடிவுக்காக இன்னுயிர் ஈந்த அத்தனை தியாகிகளையும் ஒரேநாளில் நினைவுகூரவேண்டுமென்ற உயரிய எண்ணத்தோடு, 1985ஆம் ஆண்டு முதல் ஈரோஸ் அமைப்பு மலையக தினமாக தியாகி சிவனு லெச்சுமணன் மரணித்த மே மாதம் 11ஆம் நாள் மலையக தியாகிகள் தினமாக பிரகடனப்படுத்தி, அன்றுமுதல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மலையக தியாகிகள் தினத்தை அனுஷ்டித்து வருவதோடு, நினைவேந்தல் நிகழ்வுகளையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் முதலாவது நிகழ்வை 1985ஆம் ஆண்டு சென்னையிலும் இறுதியாக நினைவேந்தல் வாரமாக ஹட்டனிலும் கடந்த வருடம் நடத்தியிருந்தது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலை காரணமாக நினைவேந்தல் நிகழ்வை(கூட்டம்) இரத்துசெய்துள்ளபோதும் எமக்காக இன்னுயிர் ஈந்த தியாகிகளை ஈரோஸ் அமைப்பு உணர்வுடன் நினைவு கூருகின்றது.

இந்த நிலையில், அனைத்து உறவுகளும் தங்களின் இல்லங்களில் தீபமேற்றி அகவணக்கம் செலுத்தி எமது உணர்வுகளில் நீங்களும் பங்குகொள்ளுமாறு ஆழைப்புவிடுக்கின்றோம்” என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .