2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘மலையகத் தொழிற்சங்கங்கள்அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள்’

ஆ.ரமேஸ்   / 2018 ஏப்ரல் 29 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத் தொழிற்சங்கக் கட்சிகள், அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள் என்றும் தொழிலாளர்களுக்கு எதிரானவர்கள் என்பதையும், மீண்டும் நிரூபித்துள்ளனர் என்று, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மலையகப் பிராந்திய இணைப்பாளரும் உக்குவலை பிரதேச சபை உறுப்பினருமாகிய டேவிட் சுரேன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ஊடகங்களுக்கு நேற்று (29) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தொழிலாளர் தினமான மே முதலாம் திகதியை, 7ஆம் திகதி கொண்டாடுமாறு, அரசாங்கம் அறிவித்ததை, மலையகத் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன

“எட்டு மணித்தியால வேலை நேரத்துக்காக போராடி, உயிர்த்தியாகம் செய்து வென்றெடுத்த நாளாகவும், அதை நினைவு கூருவதற்கும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளியில்​ கொண்டுவருவதற்குமாக, மே 1ஆம் திகதி, உலகளவில், தொழிலாளர்கள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இதை, முறையாக குறித்த நாளில் கொண்டாடுவதற்கான தகுதியை, மலையக தமிழ் மக்களுக்கான தொழிற்சங்கங்கள் இழந்துள்ளன” என்று அவர் தெரிவித்தார்.

வெசாக் தினத்துக்குப் பாதகம் ஏற்படாமல், சில முற்போக்கு சக்திகள், மே 1ஆம் திகதியைக் கொண்டாடவுள்ளன என்று தெரிவித்த அவர், அந்த வகையில், தொழிலாளர் வர்க்கக் கட்சியான புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, மே 1 முதலாம் திகதி, மலையகப் பிராந்திய மே தினத்தை, இராகலை நகரில் அனுஷ்டிக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில், கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம், பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பு, புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி, சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு ஆகியனவும் இணைந்து செயற்படவுள்ளன என்றும், எனவே, தோட்ட தொழிலாளர் நலனில் அக்கறையுள்ள அமைப்புகளை இக்கூட்டத்தில் பங்குகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .