2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மழையால் நீர்மின்சார உற்பத்தி அதிகரிப்பு

செ.தி.பெருமாள்   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில்  நிலவிவரும் மழையுடனான வானிலைக்  காரணமாக , நீர் மின்சார உற்பத்தி  25 சதவீதம் அதிகரித்துள்ளதென பொதுவாக தற்போதைய நிலையில் 55மூ அதிகரித்துள்ளது மின்சக்தி அமைச்சின்  ஊடகப் பேச்சாளர்  சுலக்சன ஜெயவர்த்தன தெரிவித்தார்.

நேற்று (18) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட  போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 83.2 அடி ஆகவும்  மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 91.2 அடி,  கொத்மலை 72.2 அடி, விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 34.9 அடி,  சமனெலவேவா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 42.5 அடி உயர்ந்துள்ள நிலையில், ரந்தனிகல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயரவில்லை என்றும் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .