2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மஸ்கெலியா வைத்தியசாலைக் கட்டடத்தில் குளவிக் கூடுகள்

Editorial   / 2020 ஜூன் 02 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

காமினி இலங்கதிலக

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் இரண்டாம் மாடியில், பாரியளவில் குளவிக் கூடுகள் காணப்படுவதால், வைத்தியசாலையின் நோயாளிகள், வெளி நோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்கு வருபவர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட நிர்வாக ஊழியர்கள் என அனைவருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மத்திய மாகாண சுகாதார அமைச்சின் கீழ், நிர்வகிக்கப்படும் இந்தப் பிரதேச வைத்தியசாலையில், சிறுவர் விடுதி உட்பட மற்றைய விடுதிகள் என, மொத்தம் 6 மாடிகள் உள்ளன. சுமார் 20 தோட்டங்கள், 3 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இந்த வைத்தியசாலைக்கே, சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த வைத்தியசாலையில் தொடர்ச்சியாக குளவிக் கூடுகள் காணப்படும் நிலையில், அவை வைத்தியசாலை நிர்வாகத்தினரால் அகற்றப்பட்டாலும் தொடர்ச்சியாக குளவிக் கூடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

எனவே,இந்தக் குளவிக் கூடுகளை அகற்றி, நிரந்தர தீர்வை வனஜீவராசிகள் திணைக்களம் அல்லது பொறுப்பான பிரிவினர் பெற்றுத் தரவேண்டுமு்என, வைத்தியசாலை அலுவலக சபையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தேயிலை மலையில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி, சிகிச்சைக்காக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நிலையில், வைத்தியசாலையிலேயே குளவிக்கூடுகள் கட்டியிருப்பதால், வைத்தியசாலை நிர்வாகமும் நோயாளர்களும் அச்சத்திலேயே வைத்தியாசலைக்குள் சென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .