2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்’

Editorial   / 2019 ஜூன் 28 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆட்சி அதிகாரம் கைவசம் இருந்தபோது, பெருந்தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஆண்ட மஹிந்தானந்த அளுத்கமகேயும்  அவரின் சகாக்களும், இன்று பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக முதலைக்கண்ணீர் வடிப்பதாக விமர்சித்துள்ள கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், இவ்வாறான பருவகால அரசியல் கோமாளிகளின் நாடகங்களை நம்பி, மலையக மக்கள் ஏமாந்தகாலம் மலையேறிவிட்டது என்றும் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, இந்த அரசாங்கத்தின் ஊடாக தமிழ் முற்போக்குக் கூட்டணி எதையும் செய்யவில்லை என்றும் அவர்களுக்கு 50 ரூபாய் சம்பள உயர்வைக்கூட பெற்றுக்கொடுக்கவில்லை என்றும், மஹிந்தானந்த அளுத்கமகே, நேற்று (27) கருத்து வெளியிட்டிருந்த நிலையில், இதற்குப் பதிலளிக்கும் வகையிலேல், வேலுகுமார் எம்.பி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இழுத்தடிப்புச் செய்யாமல் உடனடியாக 50 ரூபாய்க் கொடுப்பனவை, நிலுவைத் தொகையுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, வழங்குமாறு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் இதற்கமைய அந்தச் சலுகை விரைவில் மக்களைச் சென்றடையும் என்பது உறுதி என்றும் தெரிவித்தார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் எல்லாவற்றுக்கும் பலியாடுகளைப் போன்று தலையாட்டி, கைகட்டி ‘ஆமாம் சாமி’ போடும் அரசியலை தமிழ் முற்போக்குக் கூட்டணி முன்னெடுக்கவில்லை என்றும் உள்ளே இருந்து போராடியவாறே உரிமைகளை வென்றெடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.

தனிவீட்டுத் திட்டம், காணி உரிமை, அதிகார சபை, பிரதேச சபை சட்டத்தில் திருத்தம், பிரதேச செயலகம் உருவாக்கம் என குறுகிய காலப்பகுதிக்குள் உரிமை அரசியலுடன் தொடர்புடைய விடயங்களை வெற்றிகரமாக செய்துமுடித்துவிட்டதாக அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .