2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இழந்துவிடக்கூடாது’

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் இணைக்கும் ஒருவராகவே, தொழிலதிபர் ஏ.எல்.எம்.பாரிஸை காண்பதாகத் தெரிவித்த மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கண்டி மாவட்டத்தில், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அச்சமூகம் இழந்துவிடக்கூடாது என்றும் எனவே, ஏ.எல்.எம்.பாரிஸை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு, கண்டி மாவட்ட முஸ்லிம்கள் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அக்குரணையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,

நாடாளுன்றத் தேர்தலுக்கான பெயர் விவரங்கள் வெளிவராத நிலையில், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களால், கண்டி மாவட்ட வேட்பாளராகக் களமிறக்கப்பட்டு, தமது தேர்தல் பணிகளை முன்னெடுக்கும்படியும் அதற்கான ஆசிர்வாதத்தை உயர்மட்டம் வழங்கியுள்ளமையையும் அவர் நினைவூட்டினார்.  

இது முஸ்லிம் சமூகத்துக்குக் கிடைத்துள்ள கண்ணியம் மட்டுமல்ல, அச்சமூகத்துக்கு கிடைக்கக்கூடிய அங்கிகாரமாகவே தான்  கருதுவதாகவும் தெரிவித்தார்.

முழு முஸ்லிம்களும் ஒன்றிணைந்தாவது, அவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைப்பதற்கான காலோசிதமானத் திட்டத்தை தங்களுக்குள் வகுத்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .