2024 மே 08, புதன்கிழமை

’ரணில் அசமந்த போக்குடையவர்’

எஸ்.சதிஸ்   / 2020 ஜூலை 09 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ரணில் விக்ரமசிங்வின் ஆட்சியில், நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைந்து காணப்பட்டது. ஆனால் ராஜபக்ஷ ஆட்சி காலத்தில், 40 பில்லியனுக்கு இருந்த அபிவிருத்தித் திட்டங்கள் 70 பில்லியனைத் தாண்டியது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அசமந்த போக்குடைய ஒரு தலைவர்” என்று, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று (09) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், 

“மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தனர். நாம் புள்ளிவிவரவியலை எடுத்து நோக்கினால் அதிகமான அபிவிருத்தியை முன்னெடுத்தது எமது அரசாங்கம்.

“அதேபோன்று எதிர்வரும் காலங்களிலும் கோட்டபாய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம்தான் இருக்கும். ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ ஆகியோருடைய கூட்டங்களுக்குக்கூட எவரும்  செல்வதில்லை. துண்டுத் துண்டாக பிளவுபடும் கட்சிக்கு, மக்கள் எவரும் செல்லமாட்டார்கள்.

“இலங்கை மத்திய வங்கியில் கொள்ளையடித்தவர்கள், நிதி அமைச்சில் கொள்ளையடித்தவர்கள், பாதுகாப்பு அமைச்சில் கொள்ளையடித்தவர்கள், நாட்டுக்கு துரோகம் இழைத்தவர்களை நாம் எப்போதும் இணைத்துக் கொள்ளமாட்டோம். நாம் எப்போதும் தேசிய அரசாங்கத்தை அமைக்கமாட்டோம்.  150க்கும் மேற்பட்ட ஆசனங்களை எம்மால் பெறமுடியும்.

“ஐக்கிய மக்கள் சக்தி என்பது புதிதாக உருவாக்கப்பட்ட கட்சி. ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்கள் சக்தியின் கட்சியின் நிறம் நீலம் சஜித் பிரேமேதாஸவுக்கு நாட்டைப் பிடிக்கவும் முடியாது. ஸ்ரீ கொத்தவை பிடிக்கவும் முடியாது. அவருடைய வீட்டைப் பிடிக்கவும் முடியாது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X