2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வங்கிக் கொள்ளையால் பாதிப்பு; பாதிக்கப்பட்டவர்கள் ஆளுநரை சந்திப்பதற்கு நடவடிக்கை

Editorial   / 2020 ஜனவரி 03 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

 

பலாங்கொடை - உடவெல சனச வங்கி மோசடியில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், இவ்விடயம் தொடர்பாக, எதிர்வரும் 6ஆம் திகதி, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை, பலாங்கொடை சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் அகில சாலிய எல்லாவள மேற்கொண்டுள்ளார்.

இவ்வங்கியில், தமது பணத்தை வைப்புச் செய்த பாதிக்கப்பட்டோரின் அமைப்பின் பிரதிநிதிகள், நேற்று முன்தினம் மாலை, அவரை சந்தித்தபோது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இவ்விவகாரத்தை ஆளுநரிடம் கலந்துரையாடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க தான் முழு முயற்சியை மேற்கொள்வதாக, அமைப்பாளர் அகில எல்லாவள தெரிவித்தார்.

மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் இவ்வங்கியின் முகாமையாளர் மீது வழக்குத் தொடரப்பட்டு அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தமது வைப்புப்பணத்தை இழந்தோர், தமது பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள வங்கி, அரசியல் தரப்புக்கும் பாரிய அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வங்கிக்கொள்ளையால் சுமார் 1000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், தங்களது பணத்தை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .