2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘வழங்கிய வாக்குறுதிகளை சஜித் நிறைவேற்றுவார்’

எஸ்.சதிஸ்   / 2019 ஜூலை 15 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சஜீத் பிரேமதாஸ என்பவர், வாக்குறுதிகளை வழங்கிவிட்டுச் செல்லும் தலைவர் அல்லர் என்றும், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் தன்மை கொண்டவர் என்றும் தெரிவித்த ஜனனி சஜித் பிரேமதாஸ, நாடளாவிய ரீதியில் சேவைகளைச் செய்துவரும் அவர், மலையக மக்கள் எதிர்பார்க்கின்ற காணிப் பிரச்சினைகளுக்கும் நிச்சயமாகத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பார் என்றும் தெரிவித்தார். 

ஹட்டனில் நேற்று (14) நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், 

போஷணைக் குறைபாடு காரணமாக, பெருந்தோட்டங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருவதை, தான் உணர்ந்துகொண்டதாகவும் இந்நிலையில் மந்தப் போஷணையை ஒழிக்கும் வேலைத்திட்டத்தை, ஹட்டன் நகரில் முதலில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

மலையகப் பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற பெண்கள், பல்வேறு பிரச்சினைகளுக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் வாழ்ந்து வருவது, நாடறிந்த உண்மை என்று தெரிவித்ததுடன், பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்கள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  

நாட்டின் கல்வி, கொழும்புக்கு வேறாகவும் மலையகத்துக்கு வேறாகவும் இருப்பதைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும், ஒரே மாதிரியான கல்வி கிடைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியதுடன், அமைச்சர் சஜித் பிரேமேதாஸவின் பணிப்புரையின் கீழ், மலையகத்தில் மாத்திரம் அல்ல, இந்த நாட்டில் வாழுகின்ற ஏழை மக்களின் பிள்ளைகள் அனைவருக்கும் புலமைபரிசில் எனும் வேலைத்திட்டத்தைக் கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவித்தார். 

அதன்முலம் பெருந்தோட்ட மக்களின் பிள்ளைகளும் நன்மையடைவர் என்றும் அவர் தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .