2024 மே 02, வியாழக்கிழமை

கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்குரிய இந்துக் கோவில் கண்டுபிடிப்பு

Editorial   / 2019 ஜூலை 18 , பி.ப. 01:59 - 1     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

மன்னார் மாவட்டத்தின் குருந்தன்குளம் பகுதியிலிருந்து, கி.பி 13ஆம் நூற்றாண்டுக்குரிய வழிபாடுகளுடன் கூடிய இந்துக் கொவிலொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில், யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை (இணைப்பாளர் தொல்லியல்துறை) பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில், உதவி விரிவுரையாளர், மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வின் போதே, இந்தக் கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக்கோவில் அமைந்துள்ள பிரதேசம் பற்றியும் அவ்விடத்தின் முக்கியத்துவம் பற்றியும், பாலி மற்றும் சிங்கள இலக்கியத்தில் வரும் “குருந்தி” என்ற இடமே, குறித்த இடமாகக் காணப்படலாம் என்று, பேராசிரியர் தெரிவித்தார்.

“சாவகனுக்கும்” இவ்விடத்துக்கும் தொடர்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுதை மற்றும் செங்கற்களாலான இக்கோவிலின் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், அந்தராளம், பலிபீடம் ஆகியனவும் சுவர்களும் தூண்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 1

  • Jegan Friday, 19 July 2019 08:28 AM

    Hats off!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .