2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குளத்திலிருந்து வெளியேறிய புகையை ஆய்வுசெய்யத் தீர்மானம்

Editorial   / 2018 ஜூலை 24 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

 

யாழ்ப்பாணம் – மணியந்தோட்டம், 1ஆம் குறுக்குத் தெரு பகுதியிலுள்ள குளமொன்றை, யாழ். பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் புனரமைப்புக்கு உட்படுத்தும் போது, அதிலிருந்து புகை வெ ளிப்பட்டதை அடுத்து, குளத்தின் புனரமைப்புப் பணிகள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, அக்குளத்தை ஆய்வுக்குட்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று (23) இடம்பெற்றுள்ள இச்சம்பத்தின் போது, குளத்துக்குக்குள்ளிருந்து நாகபாம்பு ஒன்றும் வெளிவந்ததாகவும் இதனையடுத்து, புனரமைப்புப் பணிகள் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இன்று (24) காலை, சம்பவ இடத்துக்குச் சென்றுள்ள பிரதேச செயலக அதிகாரிகள், கிராமசேவகர் மற்றும் பொலிஸார், குளத்தைப் பார்வையிட்டதோடு, இச்சம்பவம் குறித்து யாழ். பொலிஸ் நிலையத்தில், முறைப்பாடொன்றும் பதிவு செய்தனர். 

குறித்த குளத்துக்குள் வெடிபொருட்கள் இருக்கலாமென அதிகாரிகளும் பிரதேச மக்களும் அச்சம் தெரிவிக்கும் நிலையில், விசேட அதிரடிப் படையினருடைய ஒத்துழைப்புடன், குளத்தை ஆய்வுசெய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .