2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சாவகச்சேரி பிரதேச சபையின் பாதீடு நிறைவேறியது

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

சாவகச்சேரி பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் வாக்கெடுப்பு எதுவுமின்றி உறுப்பினர்களினால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வரவு - செலவுத் திட்டத்தின் அங்கிகாரம் பெறுவதற்கான அமர்வு, தவிசாளர் தலைமையில் நடைபெற்றபோது, வரவு – செலவுத் திட்டத்தில் அடுத்த வருடத்ததுக்கான  மொத்த வருமானமாக 10 கோடியே 90 லட்சத்து 13400 ரூபாவும் செலவீனமாக 10 கோடியே 90 லட்சத்து 11,150 ரூபாயும் காட்டப்பட்டுள்ளது.

இதனை அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.

வரவு – செலவுத் திட்டத்தை உறுப்பினர் இ.தெய்வேந்திரம்பிள்ளை முன்மொழிய  க.குகானந்தன் வழிமொழிந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .