2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிவப்பு உடை அணிந்தவருக்கு எச்சரிக்கை

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 02 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மல்லாகம் நீதிவான் நீதிமன்றுக்கு சிவப்பு உடை அணிந்து வருகை தந்திருந்த பெண் ஒருவரை எச்சரித்த நீதிவான், நீதிமன்றுக்கு நாகரிகமான முறையில் சமூகமளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், விடுமுறைக் காலம் நிறைவடைந்து புத்தாண்டில் நேற்று (01) காலை ஆரம்பமானது. நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் வழக்குகள் விசாரணைக்கு  வந்தன. வழக்கு ஒன்றில் முன்னிலையாகியிருந்த பெண் ஒருவர் சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்.

அவரது ஆடை தொடர்பில் விசனம் தெரிவித்த நீதிவான், நீதிமன்றுக்கு நாகரிகமாக சமூகமளிக்க வேண்டும் என்று எச்சரித்தார். ஒழுக்கமுடைய இடமாக நீதிமன்றம் உள்ளது என்றும் நீதிவான் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றுக்கு வருகை தருவோரின் உடை தொடர்பில் நீதிமன்ற பொலிஸ் அலுவலகர் கண்காணிப்பது அவசியம். அந்த நடைமுறையே அனைத்து நீதிமன்றங்களிலும் பின்பற்றப்படுகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .