2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சீவல் தொழிலுக்கு அனுமதி கிடைக்கும்?

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சீவல் தொழிலாளிகளின் வாழ்வாதார நலன் கருதி, ஊரடங்குச் சட்ட நேரத்தில், அவர்கள் தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதியைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்தரைத்த அவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும், 5,000 பேரினது வாழ்வாதாரமாக இருக்கும் கள் உற்பத்தியானது ஊரடங்குச் சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதென்றார்.

அவர்களது தொழிலைத் தொடர அனுமதிக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், அவ்வாறு பெறப்படும் கள்ளைச் சந்தைப்படுத்த வேண்டுமெனவும் கூறினார்.

பெறப்படும் உற்பத்தியை வெல்லம் தயாரிப்பதற்கு அல்லது போத்தலில் அடைப்பதன் மூலம் பயனைப் பெற்றுக்கொள்ள முடியுமெனத் தெரிவித்த அவர், அவ்வாறு போத்தலில் அடைப்பதென்றால், அதை, மதுவரித் திணைக்களத்தின் அனுமதிக்கமையவே மேற்கொள்ள முடியுமெனவும் கூறினார்.

அதற்கான கோரிக்கை, பனை தென்னை வளக் கூட்டுறவுச் சங்கத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளதெனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .