2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவு சரிந்து விட்டது என்பது ஒரு மாயை’

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 மார்ச் 15 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவு சரிந்து விட்டது என்பது ஒரு மாயை” என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று  (15) இடம்பெற்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருக்கின்ற மக்களை மாவட்டம் தோறும் சென்று சந்தித்து அவர்களின் அபிப்பிராயங்களை நாங்கள் பெற்றுக்கொண்டு வருகின்றோம்.

அந்த வகையிலே இன்று (15) நாங்கள் மன்னார் மாவட்டத்துக்கு மக்களை சந்திக்க வந்தோம்.

மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் எங்களின் மக்கள் பிரதிநிதிகளை நாங்கள் அழைத்து மக்களின் கருத்துக்கள் தொடர்பாக அவர்களுக்கு தெரியப்படுத்தி பல்வேறு செயல் திட்டத்தை அமுல்படுத்தி எமது கட்சியை இன்னும் பலமான கட்சியாக எதிர் காலத்தில் செயல்படுத்துவதற்கு ஏற்ற வழி முறைகளை ஏற்படுத்திக் கொள்ள இச் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்போடு இன்னும் அதிக அளவு ஒருமித்தவர்களாக உள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஒரு சரிவு ஏற்பட்டுள்ளதை மேலோட்டமாக பார்க்கப்பட்ட போதும் அது இத்தேர்தலின் இயல்பு என்று சொல்லக்கூடிய வகையிலே பலர் மாறாகவே வாக்குகளை வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவு சரிந்து விட்டது என்பது ஒரு மாயை என்பதை நாங்கள் விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. தற்போது மக்கள் அபிவிருத்தியை நோக்கிய விடயங்களிலும் அக்கறையாக இருக்கின்றார்கள். அந்த விடயங்களை செய்ய வேண்டிய கடற்பாடு எங்களுடைய உறுப்பினர்களுக்கு இருக்கின்றது” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .