2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘துணுக்காய், உடையார் கட்டுப் பகுதிகளில் நெல் உலரவிடும் தளங்கள் நிர்மாணம்’

Yuganthini   / 2017 ஜூன் 21 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

வட மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதி ஒதுக்கீடான, 20 இலட்சம் ரூபாய் செலவில், முல்லைத்தீவு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் கீழ் உள்ள  துணுக்காய் மற்றும் உடையார் கட்டு ஆகிய பகுதிகளில், விவசாயிகளின் நலன் கருதி, நெல் உலரவிடும் தளங்கள் அமைக்கப்படவுள்ளனவென, முல்லைத்தீவு மாவட்ட விவசாயத் திணைக்கள பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொன்னையா அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொட‌ர்பாக, அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“வட மாகாண சபையின் நடப்பாண்டுக்குரிய குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதி ஒதுக்கீடான 20 இலட்சம் ரூபாய் செலவில், துணுக்காய் பகுதியில் 2 நெல் உலரவிடும் தளங்களும்  உடையார் கட்டுப் பகுதியில் 2 நெல் உலரவிடும் தளங்களுமாக மொத்தம் 4 தளங்கள் அமைக்கப்படவுள்ளன.

“இதற்கான கேள்வி கோரல்கள் மூலமாக, பொருத்தமான ஒப்பந்தக்காரர்கள் தெரிவுசெய்யப்பட்டு, வேலைகள் ஒப்படைக்கப்படவுள்ளன.

“எனவே, வேலைகள் நடைபெறும் பகுதியில் உள்ள கமக்கார அமைப்புகளுக்கு உட்பட்ட விவசாயிகள், நடைபெறவுள்ள வேலைகள் தொடர்பில் கண்காணிப்பு செய்வதுடன், வேலைகளில் ஏதும் குறைபாடுகள் காணப்படின், தங்கள் பகுதி கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள விவசாயப் போதனாசிரியர்கள் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ எனக்குக் கிடைக்கக் கூடியவாறு, எழுத்து மூலம் தகவல்களை அனுப்பி வைக்கலாம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .