2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நினைவுத்தூபி விவகாரம்: ’துணைவேந்தரிடம் ஆதாரம் உள்ளது’

Niroshini   / 2021 ஜனவரி 10 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

மேலிடத்தின் உத்தரவிலேய முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதெனவும். அதற்காக ஆதாரமுள்ளது எனவும் இடிக்கப்பட்ட தூபியை மீள கட்டுவேன் எனவும் யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் தன்னிடம் தெரிவித்தாதாக, நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் போராட்டக்களத்துக்கு சென்றதுடன், பின்னர், பல்கலைகழகத் துணைவேந்தரை சந்தித்து பேசினர்.

இதையடுத்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தோடர்ந்துரைத்த அவர், 'இந்த நினைவுத்தூபியை இடிக்க எனக்கு அழுத்தம் தந்தார்கள். இப்பொழுது பலர் தமக்கு தொடர்பில்லையென கூறுகிறார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை நான் பல்கலைகழக பேரவை கூட்டத்தில் வெளிப்படுத்துவேன்' என, துணைவேந்தர் கூறியதாகத் தெரிவித்தார்.

'போராடும் மாணவர்களின் உணர்வு எனக்கும் உள்ளது. இந்த தூபியை இடித்தது எனக்கும் கவலைதான். அதை மீள அமைக்க- உரிய வழிமுறைகளில் நான் தயாராக இருக்கிறேன். இது பற்றி மாணவர்களுடன் பேசவுள்ளேன்' எனவும், துணைவேந்தர் தெரிவித்துள்ளதாக, சித்தார்த்தன் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .