2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புதுக்குடியிருப்பில் கோழி இறைச்சியின் விலைஅதிகம்

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ. கீதாஞ்சன்

முல்லைத்தீவு -புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு பொது சந்தையில், கோழி இறைச்சியின் விலை 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக மக்கள்  தெரிவிக்கின்றனர்.

வெளியிடங்களில் அறுநூறு தொடக்கம் எழுநூறு ரூபாய் வரை கோழி இறைச்சி விற்பனை செய்யப்படும் நிலையில்,  புதுக்குடியிருப்பு பொது சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் சந்தையில் கோழி இறைச்சி வாங்குவதை  மக்கள் தவிர்த்து வருவதாகவும்,  குறித்த சந்தையில் விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் விலைகளை கண்காணிக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .