2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினரிடம் விசாரணை

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 31 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவரை பொலிஸார் அழைத்து எச்சரித்து உள்ளனர்.

வல்வெட்டித்துறை தீருவிலில் கடந்த வருடம் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்த குழுவினரை சேர்ந்தவர்களை வல்வெட்டித்துறை போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொலைபேசி ஊடாக விசாரணைக்கு வருமாறு நேற்று (30) பொலிஸ் நிலையத்துக்கு அழைத்திருந்தார்.

அதன் பிரகாரம் அங்கு சென்ற ஏற்பாட்டு குழு இளைஞர்களை கடந்த வருடம் நீங்கள் தான் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து இருந்தீர்கள். இந்த வருடம் நிகழ்வு ஏற்பாடுகள் எதுவும் செய்ய கூடாது. இம்முறை நிகழ்வுகளை ஏற்பாடு செய்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனைக்கு ஆளாக வேண்டி வரும். உங்கள் வாழ்க்கையை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என அச்சுறுத்தும் வகையில் மிரட்டினார் என விசாரணைக்கு அழைக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை வல்வெட்டித்துறை பிரதேச ஊடகவியலாளரையும் நேற்று (30) அழைத்த பொறுப்பதிகாரி மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்து செய்தி அறிக்கையிட கூடாது எனவும் மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .