2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மோட்டார் சைக்கிள்கள் குறித்து ஆராய யாழ்ப்பாணத்தில் குழு நியமனம்

Editorial   / 2020 மே 18 , பி.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்

அதிக வேகமாக செலுத்தக் கூடிய வகையில் அமைக்கப்பெற்றுள்ள மோட்டார் சைக்கிள்கள் தங்களுடைய பிரதேசத்துக்கு தேவையில்லையெனத் தெரிவித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, பாதுகாப்பான மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்வது எங்கள் பகுதிக்கு பொருத்தமானதாக இருக்குமெனவும், இது தொடர்பில் ஆராய குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் கூறினார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், யாழ் குடாநாட்டில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அதிகளவான விபத்துகள் மீண்டும் ஏற்பட ஆரம்பித்துள்ளனவெனவும் மோட்டர் சைக்கிள்களில் பயணம் செய்யும் இளைஞர்களே, அதிகளவில் விபத்துக்குள்ளாகுவதாகவும் அவர்களில் ஒரு சிலர் உயிரிழப்பதாகவும் கூறினார்.

கொரேனா வைரஸ் தொற்றினால் யாரும் உயிரிழக்கவில்லையெனத் தெரிவித்த அவர், ஆனால் வீதி விபத்துகளால் இந்தக் காலப்பகுதியில் சிலர் இறந்து விட்டார்களெனவும் எதிர்வரும் நாள்களிலும் இவ்வாறான நிலை ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளனவெனவும் எச்சரித்தார்.

அதிக வேகமாக செலுத்தக் கூடிய வகையில் அமைக்கப்பெற்றுள்ள இந்த மோட்டார் சைக்கிள்கள் தங்களுடைய பிரதேசத்துக்கு தேவையில்லையெனத் தெரிவித்த சத்தியமூரத்தி, இது தொடர்பில் உரிய திணைக்களத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறினார்.

பாதுகாப்பான மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்வது எங்கள் பகுதிக்கு பொருத்தமானதாக இருக்குமெனத் தெரிவித்த அவர், இது தொடர்பில் குழுவொன்றை அமைத்து, அதனூடாக இதன் முன்னாயத்த நடவடிக்கைகளையும் எவ்வாறு வீதி விபத்துகளை தடுக்க முடியும் என்பதிலும் தாங்கள் ஆராயவுள்ளதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .