2024 மே 11, சனிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் டெங்கின் தாக்கம் குறைகிறது

Editorial   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந், என்.ராஜ்

 

யாழ். குடாநாட்டில், கடந்த மாதம் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட போதும், தற்போது அதன் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருவதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டி. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், கோப்பாய், நல்லூர், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளிலும் யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுமே அதிகளவு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனரெனவும் தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், புதிதாக இரண்டு விடுதிகள் திறக்கப்பட்டுள்ளனவெனத் தெரிவித்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களைப் பார்வையிடுவதற்கு, இருவருக்கு மேற்பட்டோர் வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .