2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வட மாகண மாணவர்களுக்கு ஒழுக்க விதி சுற்றறிக்கை

Editorial   / 2018 ஜனவரி 14 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.குகன்

 

வட மாகாண கல்வி அமைச்சால், வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கான ஒழுக்க விதி தொடர்பான சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டு பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பாடசாலை மாணவர்கள் எதிர்கால சமூகத்தின் முன்னோடிகள். அவர்கள் பாடசாலையில் கற்றுக் கொள்ளும் விடயங்கள் அவர்களின் வாழ்க்கைக்கு மிக அவசியமாகும். தற்போது பாடசாலை மாணவர்கள் மிக மோசமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். இது தொடர்பில் பாடசாலைச் சமூகம், கல்விச் சமூகம் அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளன.

“இது தொடர்பில் சபை உறுப்பினர்கள் துறைசார்ந்த உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. மாணவர்களின் சீருடை, சிகை அலங்காரம், பாடசாலைக்கு  வருகை தரும் விதம், பாடம் மற்றும் இணைப்பாடவிதானத்தில் ஈடுபாடு, அலைபேசிப் பாவனை, நேரத்துக்கு பாடசாலைக்கு சமூகம் தருதல், போதைப்பொருள் பாவனை போன்ற விடயங்கள் தொடர்பில், கல்வி ஆலோசனைக் கூட்டத்தில் பலராலும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

“இவற்றில் பாடசாலை சமூகத்துக்கு ஏற்ற வகையில் மாணவர் ஒழுக்க விதி தயாரிக்கப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மாணவர்களுக்கு ஒழுக்க விதி தயாரிக்கப்பட்டு தற்போது பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .