2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’ விலகினாலும் வலுவாக இருக்கும்’

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகினாலும், அது வலுவாகவே இருக்குமெனத் தெரிவித்த வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், எது எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் பிடியில் தொடர்ச்சியாகவே இருந்துகொண்டே இருக்குமனவும் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இலங்கை அரசாங்கம், 30/1 தீர்மானத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது, ஒரு சிறுபகுதி மட்டமே எனவும் ஏனைய உறுப்பு நாடுகளின் வலுவான அனுசரணை தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்குமெனவும் அவர் கூறினார்.

எனவே குறித்த தீர்மானம் முழுமையான திருப்தியை தராது விட்டாலும், சர்வதேச வலுவுடையதாகவே இருக்குமெனத் தெரிவித்த அவர், ஆனால் கோட்டாபய அரசாங்கம் தேர்தல்களை இலக்காகக் கொண்டு சிங்கள தேசத்துக்கு மாயைக் காட்டுவதாகவும் சாடினார்.

தென்னிலங்கை மக்களுக்கு, தேசிய வாதத்தைப் பேசி, படம் காட்டுவதற்காகவே, 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதாக அரசாங்கம் கூறியுள்ளதாகவும், சிவஞானம் குற்றஞ்சாட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .