2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குடிநீர் வசதிகளை வழங்குமாறு வேண்டுகோள்

Editorial   / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர், எம்.யூ.எம். சனூன்

புத்தளம் மற்றும் வன்னி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் குடி நீர் தேவை தொடர்பில்கவனம் செலுத்துமாறு கைத்தொழில், வணிகத் துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களிம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லா தெரிவித்தார்.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நீர் நிலைகளில் மற்றும் குளங்களில் உள்ள நீர் மட்டம் குறைந்து காணப்படுவதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அனர்த்த முகாமைத்துவ அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் மேலதிக பௌசர்களைப் பயன்படுத்தி தண்ணீரை விநியோகிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு, அமைச்சர் ரிஷாட், மன்னார் அரசாங்க அதிபரை கோரியுள்ளார்.

அத்தோடு, புத்தளம் மாவட்டத்தின் வணாத்தவில்லு பிரதேச செயலகப் பிரிவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அம்மக்களின் வேண்டுகோளான பௌசர் மூலம் 3 கிராம அதிகாரி பிரிவிலுள்ள 11 கிராமங்களுக்கு நீர் விநியோகத்தை பெற்றுத்தருமாறும் அமைச்சர், கரைத்தீவு கிராம அபிவிருத்தி சங்கத்தினர் வேண்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .