2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நாட்டு மரக்கறிகள் அதிக விலைக்கு விற்பனை

Editorial   / 2020 மார்ச் 24 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

புத்தளம் ஆனமடுவப் பகுதியில், நாட்டு மரக்கறிகள் அதிக விலைக்கு விற்பனைச் செய்யப்பட்டதாக, நுகர்வோர் தெரிவித்தனர்.

மேற்படி மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை (20) முதல் நீடிக்கப்பட்டிருந்த ஊரடங்குசட்டம், இன்று(24) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டது.

இந்நிலையில், பொதுமக்கள் பொருள்களைக் கொளவனவுச் செய்வதற்காக, பிரதான நகரங்களுக்குப் படையெடுத்தனர். இதனால், வர்த்தக நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள், பிரதான சந்தைகளில் மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து பொருள்களைக் கொள்வனவு செய்தனர்.

இந்நிலையிலேயே சந்தைக்குத் திரண்ட மக்களை இலக்கு வைத்து, அதிக விலைக்கு பொருள்கள், மரக்கறிகள் விற்பனைச் செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது.

ஒரு கிலோகிராம் வட்டக்காய், வெள்ளரிக்காய் என்பன 200 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்பட்டன என்று, நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏனைய மரக்கறிகள் சாதாரண விலைக்கு விற்பனைச் செய்யப்பட்டப் போதிலும் நாட்டு மரக்கறிகளே அதிக விலைக்கு விற்பனைச் செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.

இதேவேளை, ஹலாவத்த பிரதேசத்தில், ஒரு கிலோகிராம் கெலவல்லா மீன் 900 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .