2024 மே 08, புதன்கிழமை

பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டீ சில்வா

பேருவளை-ஹெட்டிமுல்ல பிரதேசத்தில், 20 ஏக்கர் பரப்புடைய தென்னந்தோட்டமொன்றில், சட்டவிரோதமானமுறையில் இயங்கிவந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார், அதன் உரிமையாளர் உள்ளிட்ட  அறுவரை கைதுசெய்துள்ளனர்.

பேருவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, 10 மணித்தியால சோதனையின் பின்னர், சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த  இடத்திலிருந்து, 144,000 லீற்றர் ​கோடா கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், கசிப்பு உற்பத்திக்காக வைக்கப்பட்டிருந்த பெருமளவான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவற்றின் பெறுமதி 95 இலட்சம் ரூபாய் என, பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட  சந்தேகநபர்களை தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதுடன்,  அவர்களை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X