2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

1,500 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளுடன் HCL செயற்பாடுகள் இலங்கையில் ஆரம்பம்

Editorial   / 2020 ஜூன் 20 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில்நுட்ப நிறுவனமான HCL Technologies (HCL) இலங்கையில் தனது செயல்பாடுகளைத் தொடங்குவதாக இன்று அறிவித்துள்ளது. இந்தப் பிராந்தியத்தில் தனது பிரசன்னத்தைக் குறிக்கும் வகையில், கொழும்பில் உள்ள தனது அலுவலகத்தில், தனது நடவடிக்கைகளைத் தொடங்கிய முதல் பதினெட்டு மாதங்களுக்குள், புதியவர்கள், அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநர்களுக்காக 1,500 இற்கும் மேற்பட்ட புதிய உள்நாட்டு வேலை வாய்ப்புகளை உருவாக்க HCL திட்டமிட்டுள்ளது. இலங்கையில் HCL இன் வணிக, மேம்பாட்டு மூலோபாயத்தின் ஒரு முக்கிய அங்கம், இலங்கையின் உள்நாட்டு திறமைக் குழாத்தை உலகளாவிய பணிகளுக்குப் பயன்படுத்துவதாகும்.

HCL பெப்ரவரி 2020 இல், இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையுடன் கைகோர்த்து, அதன் உள்நாட்டு நிறுவனமான HCL Technologies Lanka (Private) Limited நிறுவனத்தை ஆரம்பித்து, பிராந்தியத்தில் அதன் முதல் விநியோக மய்யத்தை அமைத்தது. இந்த நிறுவனம் மூலம், பயன்பாடுகள், கணினி ஒருங்கிணைப்பு சேவைகள், உள்கட்டமைப்பு சேவைகள் ஆகியவற்றில் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு HCL தனது சேவைகளை வழங்கும்.

உள்நாட்டில் திறமைசாலிகள்  குழாத்தை விருத்தி செய்வதற்கும், பயிற்சியளிப்பதற்கும் உள்நாட்டுத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், பொறியியல் கற்கை நிறுவனங்களுடன் தீவிரமாகக் கூட்டுப் பணிகளை முன்னெடுப்பதன் மூலம், வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் HCL தனது பணி ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தையும் செயற்படுத்தும்.

புதியவர்களுக்கு, HCL ESOFT  பயிற்சி, பணிக்கமர்த்தல் திட்டத்தின் மூலம், க.பொ.த உயர் தரம், உயர் தேசிய டிப்ளோமா (HND) மாணவர்களைப் பணிக்கமர்த்துவதில் HCL கவனம் செலுத்தும். இந்நிறுவனம் உள்நாட்டு தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடத்தில், 'வேரூன்றி இருக்க' உதவுகிறது. மேலும், வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையரைத் தாயகம் திரும்பி வந்து, இந்த வளர்ச்சி மாற்றப் பயணத்தில் அங்கம் வகிக்குமாறும் அழைப்பு விடுக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .