2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

Micromax மற்றும் KaiOS டெக்னொலஜிஸ் இணைவு

Editorial   / 2018 ஏப்ரல் 25 , மு.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

Micromax Informatics, வளர்ந்து வரும் KaiOS மொபைல் மென்பொருள் கட்டமைப்பு வடிவமைப்பாளரான KaiOS டெக்னொலஜிஸுடன், பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. 

இதனூடாக இலங்கையிலும்  மத்திய கிழக்கு நாடுகளிலும் உள்ள பாவனையாளர்களுக்கு ஒப்பற்ற அனுபவத்தை பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது. 

இந்தப் பங்காண்மை ஊடாக, மில்லியன் கணக்கான Micromax அலைபேசிப் பாவனையாளர்களை இலக்காக கொள்ளப்பட்டுள்ளதுடன், பிரத்தியேகமான பாவனை அனுபவம் வழங்கப்படுவதுடன், வினைத்திறன் வாய்ந்த வகையில் மூன்றாம் தரப்பு appகளை KaiOS ஊடாகப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கும்.   

 குறித்த சந்தைகளில் Micromax அலைபேசிகளின் வெற்றிகரமான விற்பனையைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அலைபேசிப் பாவனையைத் துரிதப்படும் செயற்பாடுகளில், இயற்கையான அடுத்த படிமுறையாக, Micromax மற்றும் KaiOS டெக்னொலஜிஸ் ஆகிய நிறுவனங்களின் கைகோர்ப்பு அமைந்துள்ளது. 

இதனூடாக வளர்ந்து வரும் சந்தைகளில் காணப்படும் பில்லியன் பாவனையாளர்களை, இணைப்பது இரு தரப்பினரினதும் நோக்காக அமைந்துள்ளது.   

 சுமார் ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, தனது பாவனையாளர்களுக்கு உயர் தரம் வாய்ந்த சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டு, Micromax செயலாற்றி வருகிறது.

 புதிய அலைபேசி KaiOS இனால் வலுவூட்டப்பட்டுள்ளதுடன், பாவனையாளர்களுக்கு ஒப்பற்ற அலைபேசி அனுபவத்தை வழங்குவதனூடாக, அலைபேசிப் பாவனையை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

பாவனையாளர்களின் உயர் தேவைகளான, அலைபேசிகளில் காணப்படும் மேம்படுத்தப்பட்ட செயற்பாடுகளை இந்தப் புதிய அலைபேசியில் உள்ளடக்கியுள்ளது. இதில் like instant messages, video calls மற்றும் intelligent voice assistants போன்ற மூன்றாம் தரப்பு app கள் அடங்கியுள்ளன.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .