2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

NDB வழங்கும் ‘ஒன் எக்கவுண்ட்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

NDB தனது புதிய ‘ஒன் எக்கவுண்ட்’ கணக்கை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. முதற் கட்டமாக இந்தச் சேவை கொழும்பு 4 இல் அமைந்துள்ள NDB வங்கியின் பிரைவட் வெல்த் மய்யக் கிளையில் மாத்திரம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

நிதித் திட்டங்களில் வைப்புச் செய்ய, சேமிக்க, முதலீடு செய்ய, திரும்பப் பெற மற்றும் கட்டியெழுப்புவதற்கான ஒரு புதுமையான வழி, அனைத்தும் ஒரே இடத்தில், ஒரே வங்கியில், NDB ஒன் எக்கவுண்ட் சௌகரியமானதாக அமைந்துள்ளது; இது வாடிக்கையாளர்கள் தங்கள் நிதி இலாகாவை எளிதில் உருவாக்கி வளர அனுமதிக்கிறது.

ஓர் எளிய நடைமுறைக் கணக்கிலிருந்து தொடங்கி, அவர்கள் தங்கள் மாத வருமானத்தை வைப்புச் செய்கிறார்கள், NDB ‘ஒன் எக்கவுண்ட்’ பின்னர் சேமிப்பை விரைவுபடுத்துவதற்கான விருப்பங்களை வழங்குகிறது. இது ஒருவரின் மாதாந்த பணத் தேவைகளுக்கு அதிகமான, ஒரு குறிப்பிட்ட தொகையை, NDB வெல்த் மனி பிளஸ் நிதியில் சேர்ப்பதன் மூலம் வழங்குகிறது. 

வாடிக்கையாளர்களுக்கு ‘NDB வெல்த் மனி’ நிதியில் உள்ள பணத்துக்கு எதிராக கடன் மற்றும் வர்த்தக தொடர்பான வேறு எந்த வசதிகளையும் பெற வாய்ப்பு உள்ளது. கூடுதலாக, NDB ஒன் எக்கவுண்ட் வாடிக்கையாளர்களுக்கு NDB வங்கி விசா கிரெடிட் கார்டை பெறலாம்.   

“எட்ஜ்” சான்றிதழ் மூலம் அதிகாரபூர்வமாக சான்றிதழ் பெற்ற இலங்கையில் உள்ள முதல் மற்றும் இன்றுவரை காணப்படும் ஒரே நிறுவனமான NDB வங்கி, நாடு முழுவதும் 111 க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட வர்த்தக வங்கியாகும். இது பல நிதி சேவைகளின் மூலம் மில்லியன் கணக்கான இலங்கையர்களுக்கு சேவை செய்கிறது.

இதன் தொடக்கத்திலிருந்தே, NDB வங்கி, NDB கெப்பிட்டல், NDB முதலீட்டு வங்கி, NDB வெல்த், மற்றும் NDB செக்யூரிட்டீஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய NDB குழு, நாட்டின் வளர்ச்சியில் ஓர் ஊக்கியாக இருந்து வருகிறது. பொருளாதாரத்தின் அனைத்து அடுக்குகளிலிருந்தும் தொழில்முனைவோர், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை பலப்படுத்துகிறது;  மேம்படுத்துகிறது. அனைத்துக் குழு நிறுவனங்களிலும் உள்ள வாடிக்கையாளர்கள் NDB குழுமத்தின் தயாரிப்பு, சேவை வழங்கல்களிலிருந்து பயனடைந்துள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .