2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

Toastmasters கழகத்தின் ‘Get to the Point’ மோட்டார் பந்தயம்

Editorial   / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

Toastmasters கழகத்தின் மாவட்டம் 82 மற்றும் இலங்கை பந்தய மோட்டார் வாகன ஓட்டுனர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் சங்கத்துடன் (SLARDAR) இணைந்து GET TO THE POINT என்ற Toastmasters வேடிக்கை நிகழ்வு மோட்டார் பந்தயத்தை முன்னெடுத்திருந்தன. அண்மையில் சுதந்திர சதுக்கம் மற்றும் Sri Lanka Foundation Institute (SLFI) ஆகியன அமைந்துள்ள இடத்தை அண்டிய பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகி இந்நிகழ்வு நடைபெற்றது. 

 மாவட்டப் பணிப்பாளரான DTM அஜந்த ஜெயவர்த்தனவின் சிந்தனை வடிவமான இந்த முயற்சி, Toastmasters என்றால் உண்மையில் என்ன என்பது தொடர்பில், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முன்னெடுப்பாக அமைந்திருந்தது. வேடிக்கையான ஒரு மாலைப்பொழுது நிகழ்வின் மூலமாக, Toastmasters மற்றும் பொதுமக்கள் மத்தியில் இடைத்தொடர்பாடல்களை இந்நிகழ்வு ஏற்படுத்தியிருந்தது. பந்தயத்தில் பங்குபற்றிய வாகனங்களிலிருந்து நேரடி காணலைகள், DJ இசை, உணவு, செயற்பாட்டு கூடங்கள் (action station) மற்றும் பல்வேறு வடிவிலான பொழுதுபோக்குகள் இந்நிகழ்வில் அடங்கியிருந்தன. 

 நேரம், வேகம் மற்றும் தூரம் தொடர்பான அம்சங்கள் அடங்கலாக வேடிக்கையான வகையில் ‘Get to the Point’ பந்தயம் அமைந்ததுடன், ஒட்டுமொத்த போட்டித்தடமானது, கொழும்பின் புறநகர்ப்பகுதிகளை வலம் வரும் வகையில் அண்ணளவாக 125 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கி, வழி நெடுகிலும் 12 முதல் 15 வரையான சோதனைச்சாவடிகளையும் கொண்டிருந்தது. இப்பந்தயம், பி.ப 2.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு, பி.ப 7.30 மணியளவில் நிறைவடைந்தது. சுமார் 30 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

எனினும் பந்தயத்தில் குறித்த இலக்கினை யார் முதலில் சென்றடைந்தது என்பதற்கு அப்பால், Toastmaster ஆக மாறுவது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, 18 மற்றும் அதற்கு மேற்பட்ட இளம் வயதினர் மத்தியில் Toastmaster என்றால் என்ன என்பதை விளக்கி, அவர்கள் எவ்வாறு இதில் இணைந்து தங்களை விருத்தி செய்ய முடியும் என்பது தொடர்பில் அறிவூட்டுவது இதன் பிரதான நோக்காக அமைந்திருந்தது. Toastmasters கழகம் பொதுமக்களை எட்டும் வகையில் ஏற்பாடு செய்துள்ள இத்தகைய முதலாவது நிகழ்வாக இப்பந்தயம் அமைந்திருந்தது.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .