2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

WUSC நிறுவன ஆலோசனை குழுவின் வருடாந்தக் கூட்டம்

Editorial   / 2018 நவம்பர் 28 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனேடிய உலக பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் (WUSC) பொருளாதார நிலைமாற்றத்துக்கான விசேட திறன்களை மேம்படுத்தும் (ASSET) திட்டத்தின் கீழ், 300க்கும் மேற்பட்ட தனியார் துறையினருடனான பங்காளித்துவத்தை ஏற்படுத்தியதன் மூலம் சுமார் 4,000க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 

இத்திட்டத்தின் ஆலோசனைக் குழுவின் PAC+ வருடாந்தக் கூட்டம், சினமன் லேக்சைட் ஹோட்டலில், இன்று (28) நடைபெறவுள்ளது. 

இந்த வருடத்துக்கான நிகழ்வானது, இத்திட்டத்தின் நேரடிப் பங்காளர்களை மட்டுமன்றி இலங்கையின் வடக்கு, வடமேற்கு, தெற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் உள்ள இளைஞர்கள், திறன்சார் அபிவிருத்தி தொடர்பான திட்டங்களில் ஈடுபடும் ஏனையோரையும் உள்ளடக்கியதாக ஒழுங்குபடுத்த 
-ப்பட்டுள்ளது. 

கனேடி அரசாங்கத்தின் நிதியுதவியுடன், 2014ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ASSET எனும் ஐந்தாண்டுத் திட்டமானது, தனியார் துறை, அரசாங்கம்,பயிற்சி வழங்குநர்கள் என்பவற்றுக்கிடையிலான பங்காண்மை, இணைந்து பணியாற்றும் தன்மை ஆகியவற்றை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. 

 இன்று நடைபெறவுள்ள PAC+ நிகழ்வில் கற்றுக்கொண்ட படிப்பினைகள், அடைவுகள், தேசிய ரீதியிலான கொள்கை தொடர்பான பரிந்துரைகள் ஆகியவை தொடர்பாகவும் வடக்கு, வடமேற்கு, தெற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட பிராந்திய ரீதியிலான ஆய்வுப்பட்டறைகளின் பெறுபேறுகள் தொடர்பாகவும் தேசிய மட்டத்திலான நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு WUSC நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வடக்கு, வடமேற்கு, தெற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் உள்ள இளைஞர்கள், திறன்சார் அபிவிருத்தி தொடர்பான திட்டங்களில் ஈடுபடும் ஏனையோரையும் உள்ளடக்கியதாக ஒழுங்குபடுத்த 
-ப்பட்டுள்ளது 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .