2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

WhatsAppஇன் கொரோனா வைரஸ் தகவல் மய்யம்

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

WhatsApp கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்துக்கு ஆதரவு அளித்திடும் வகையில் இரண்டு முன்னெடுப்புக்களைத் தொடங்குவதாக இன்று அறிவித்தது.  

உலக சுகாதார அமைப்பு, UNDP உடன் கூட்டிணைந்து WhatsApp Coronavirus Information Hub இன் உலகளாவிய அறிமுகம் நிகழ்த்தப்பட்டது. அத்துடன் Poynter Institute இன் International Fact-Checking Network (IFCN) க்கு 1 மில்லியன் டொலர் நிதியுதவியையும் வழங்கியது. 

சுகாதார பணியாளர்கள், கல்வியாளர்கள், சமூகத் தலைவர்கள், இலாப நோக்கமற்றவர்கள், உள்நாட்டு அரசாங்கங்கள், உள்நாட்டு வணிகங்களுக்கு தொடர்பு கொள்வதற்கு WhatsAppஐ நம்பியுள்ளோருக்கு, எளிய செயற்பாட்டு வழிமுறைகளை வழங்கிட கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களைக் கொண்ட மையம் - Whatsapp.com/coronavirus இல் இன்று அறிமுகப்படுத்துகிறது. உலகெங்கிலுமுள்ள பயனர்களுக்கு வதந்திகளைக் குறைக்கவும் சரியான சுகாதாரத் தகவல்களை அறிந்து கொள்வதற்கும், பொதுவான உதவிக்குறிப்புக்கள், ஆதாரங்களை இந்த தளம் வழங்குகிறது.  

மக்கள் நேரத்தை ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கும் போது மக்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்வதற்கு ஒரு எளிய, நம்பகமான மற்றும் பாதுகாப்பான வழியை WhatsApp தொடர்ந்தும் வழங்கும். இப்பரிந்துரைகள் சிறிய குழுக்கள் எவ்வாறு அதிகம் பயன்படுத்த முடியும் என்பதற்கான விரைவான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன. மேலும் உள்நாட்டு முயற்சிகளை ஒருங்கிணைப்பவர்களுக்கு UNDP யால் விநியோகம் செய்யப்படும். இதற்கு மேலதிகமாக, உலகெங்கிலுமுள்ள மக்கள் செய்தி அனுப்பும் உடனடி தகவல் தொடர்புகளுக்கு நேரடியாக பயன்படுத்த WhatsApp ஆனது UNICEF, WHO உடனும் செயற்படுகிறது. இந்த உடனடி தொடர்புகள் - hotlines Mdit (W}atsApp Coronavirus Information Hub) WhatsApp கொரோனா வைரஸ் தகவல் மையத்தில் பட்டியலிடப்படும்.  

இன்று வரை, சிங்கப்பூர், இஸ்‌ரேல், தென்னாபிரிக்கா, பிரேசில், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் எழுத்து மூலம் பயனர்களுக்கு உண்மை தகவல்களை வழங்க Whatsapp பல தேசிய சுகாதார அமைச்சுகளுடன் மற்றும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. இம்முயற்சிகள் தொடர்வதால் மையமானது சமீபத்திய ஆதாரங்களுடன் புதுப்பிக்கப்படும்.  

WhatsApp இனால் IFCNக்கு வழங்கப்பட்ட 1 மில்லியன் டொலர் நன்கொடையானது, ஆகக்குறைந்தது 45 நாடுகளில் 100க்கும் மேற்பட்ட உள்நாட்டு அமைப்புக்களை உள்ளடக்கிய R+CoronaVirusFacts Alliance க்கான தகவல் சரிபார்ப்பினை ஆதரிக்கும்.  

சர்வதேச தகவல் சரிபார்ப்பு வலையமைப்பு WhatsAppஇல் வரும் பல்வேறு விதங்களிலான உடல் ஆரோக்கியம் தொடர்பான புரளிகளைப் புரிந்து கொள்வதற்கான வழிகளை கண்டுபிடிப்பதற்கும் தகவல் சரிபார்ப்பு பயன்பாட்டின் போது அதிலுள்ள தவறான தகவல்களைக் கண்டறிந்து அவற்றை நீக்குவதற்கும் தகவல் சரிபார்ப்பவர்களுக்கான கருவிகளைக் கிடைக்கச் செய்வதை எதிர்ப்பார்க்கிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .