2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இரண்டு வருட பூர்த்தியில் FriMi; டிஜிட்டல் வங்கியியல் துறையில் தொடர்ந்தும் ஆதிக்கம்

Editorial   / 2019 ஜூன் 05 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சௌகரியம் என்பது FriMi உடன் பிணைந்துள்ளதுடன், இரண்டு வருடங்கள் எனும் குறுகிய காலப்பகுதியில் இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வங்கியினால் இலங்கையில் வங்கியியல் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் கொடுப்பனவுகள் மேற்கொள்ளும் முறையில் முற்றாக மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முழு அளவிலான டிஜிட்டல் வங்கி, மொபைல் பணப் பை மற்றும் கொடுப்பனவு கட்டமைப்பாக FriMi செயற்படுகின்றது.   

டிஜிட்டல் ஆற்றல் படைத்த இலங்கையின் நுகர்வோருக்கு நவீன வசதிகள் படைத்த தீர்வாக FriMi அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதனூடாக ஒப்பற்ற சௌகரியம் வழங்கப்படுவதுடன், தினசரி நிதிச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. இலங்கையின் சந்தையில் மாறிவரும் வாடிக்கையாளர் தேவைகளுக்கான பதிலளிப்பாக FriMi அமைந்துள்ளதுடன், தமது அலைபேசியிலிருந்து சகல அம்சங்களும் பொருந்திய சேமிப்புக் கணக்கை ஆரம்பித்து பேணுவதுடன், பெருமளவு பெறுமதி சேர்க்கப்பட்ட வாழ்க்கைமுறை உள்ளம்சங்களை அனுபவிப்பதற்கான வசதியை வழங்குகின்றது.   

FriMi சார்பாக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரேணுகா பெர்னான்டோ கருத்து தெரிவிக்கையில், “FriMi என்பது மிகவும் இளமையான வர்த்தக நாமமாகும். முதல் இரண்டு வருடங்களில் சிறந்த பெறுபேறுகளை இது பதிவு செய்துள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். எதிர்காலத்தில் கவனம் செலுத்தி, வாடிக்கையாளர்களின் எதிர்கால வாழ்க்கை முறைகள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்த போது, சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னதாக இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வங்கியை அறிமுகம் செய்யும் சிந்தனை வெளிப்பட்டது. எனவே FriMi பிரசவத்தினூடாக வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கணக்கை டிஜிட்டல் முறையில் ஆரம்பிப்பது முதல், தமது தினசரி நிதிக் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுப்பது, கொடுப்பனவுகளை மேற்கொள்வது மற்றும் தமது பணத்தை நிர்வகிப்பது வரை சகலதையும் தமது அலைபேசியினூடாக மேற்கொள்ள முடியும். அலைபேசி, பணப் பைக்கு மாற்றீடாக அமையும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், எதிர்காலம் பணமற்ற, அட்டைகளற்ற கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்ளும் காலமாக அமையும் என்பதிலும் நம்பிக்கை கொண்டுள்ளோம். சந்தையில் புத்தாக்கமான தீர்வுகளை வழங்குவதில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி எப்போதும் முன்னிலையில் திகழ்கின்றது. புரட்சிகரமான தொழில்நுட்பத்தில் முதலீடுகளை மேற்கொள்வது மற்றும் உறுதியான பங்காண்மைகளை ஏற்படுத்துவது போன்றவற்றினூடாக FriMi ஐ மேலும் துரிதமாக வளர்ச்சியடையச் செய்வோம். எமது வாடிக்கையாளர்களுக்கு சாதாரண வங்கியியல், கொடுப்பனவுகள் மற்றும் நிதியியல் முகாமைத்துவ சேவைகளை போன்றவற்றை பெற்றுக் கொடுப்பதிலிருந்து அப்பால் சென்று தினசரி செயற்பாடுகளான சொப்பிங், போக்குவரத்து, களியாட்ட தொடர்பாடல்கள், சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி போன்ற வாழ்க்கைமுறை சேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற எமக்கு இது ஏதுவாக அமைந்திருக்கும்”  என்றார்.  

FriMi தனது QR மற்றும் பிரத்தியேகமான API ஒன்றிணைக்கப்பட்ட கொடுப்பனவு ஆற்றல்களினூடாக துரிதமாக தனது e-வணிக விற்பனையாளர் வலையமைப்பையும், சாதாரண விற்பனையாளர் வலையமைப்பையும் நாடு முழுவதிலும் விஸ்தரித்த வண்ணமுள்ளது.

மேலும், FriMi இனால் 80க்கும் அதிகமான app இனுள் காணப்படும் கட்டணப்பட்டியல் கொடுப்பனவு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனூடாக, கட்டணப் பட்டியல்கள், கல்வி, காப்புறுதி, நிதிச் சேவைகள், தொடர்பாடல், கழகங்கள் மற்றும் பொழுதுபோக்கு போன்ற பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும். சந்தையில் app அடிப்படையிலான சேவை வழங்கல்கள் துரித வளர்ச்சியை பதிவு செய்துள்ளதால், FriMi தனது ‘in-app’ மீள இடம்பெறும் கொடுப்பனவு திறனை அறிமுகம் செய்து, அதனூடாக மூன்றாம் நபர் சேவை வழங்குநர்களுக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளது. தனது virtual டெபிட் அட்டையினூடாக சர்வதேச கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான வசதியையும் app இனுள் ஏற்படுத்தியுள்ளது.  

இலங்கையில் காணப்படும் எந்தவொரு அலைபேசி இலக்கத்துக்கும் பணத்தை மாற்றி, அதனை எந்தவொரு நேஷன்ஸ் ட்ரஸ்ட் ATM ஊடாகவும் மீளப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரே புத்தாக்கமான தீர்வாக FriMi அமைந்துள்ளது. கட்டணப்பட்டியல் சமர்ப்பிப்பு சேவைக்கும் வாடிக்கையாளர்கள் தம்மை பதிவு செய்து கொள்ள முடியும், இதனூடாக தெரிவு செய்யப்பட்ட சேவை வழங்குநர்களுக்கு தமது கணக்கு மீதியை அணுகிக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கலாம். புத்தாக்கமான கட்டணப் பட்டியல் பிரிப்பு உள்ளம்சத்தினூடாக, வாடிக்கையாளர்களுக்கு கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளை நண்பர்களிடையே பகிர்ந்து கொள்ள முடியும் என்பதுடன், app இனுள் காணப்படும் உள்ளம்சங்களினூடாக தெரிவு செய்யப்பட்ட நலன்புரி அமைப்புகளுக்கு நன்கொடை மற்றும் அன்பளிப்புகளை வழங்கவும் ஏதுவாக அமைந்துள்ளது.  

FriMi வாடிக்கையாளருக்கு தமது கணக்கினுள் பிரவேசிப்பதற்கு PIN, குரல், கைரேகை அல்லது முக இனங்காணல் போன்ற பல்வேறு அத்;தாட்சிப்படுத்தல் முறைகளை பயன்படுத்த முடியும். நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் தொழில்நுட்ப உட்கட்டமைப்பின் அங்கமாக FriMi அமைந்துள்ளது. வங்கியியல் துறையில் காணப்படும் சகல நியம பாதுகாப்பு உள்ளம்சங்களுக்கு உட்பட்டதாக அமைந்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .