2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கட்டுவாபிட்டிய தேவாலயத்துக்கு Idea குரூப் உதவி

Editorial   / 2019 ஜூன் 06 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய, புனித. செபாஸ்தியன் தேவாலயத்தின் உட்கூரை மீளமைப்பு பணிகளுக்கு அவசியமான i-Panel களை Idea குரூப் ஒஃவ் கம்பனிஸ் நன்கொடையாக வழங்கியிருந்தது. 

இந்தச் செயற்றிட்டம் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கையாக மாத்திரம் அமைந்திராமல், சமூக ரீதியில் பொறுப்பு வாய்ந்த இலங்கையின் நிறுவனம் எனும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றது. நன்கொடையை குறிக்கும் நினைவுச்சின்னம் ஒன்றும் கொழும்பு பேராயரும் இலங்கை கத்தோலிக்க தேவாலயங்களின் கர்தினாலுமான மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம்   Idea குரூப் லிமிடெட் தலைவர் சம்பத் மாயாகடுவ கையளித்திருந்தார்.

நாட்டில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, சுழல்காற்று மற்றும் புயல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், அனைத்து இலங்கையர்களும் ஒன்று திரண்டு, பொது மக்களுக்கு உதவுவதை அவதானிக்க முடியும், அவ்வாறான செயற்பாடுகளை Idea குரூப் முன்னெடுக்கின்றது.  

நாட்டின் கத்தோலிக்க சமூகத்தவர்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கட்டுவாபிட்டிய தேவாலயத்தின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்க Idea குரூப் முன்வந்திருந்தது. இலங்கையர்கள் அனைவரையும் இன, மத மற்றும் மொழி வேறுபாடின்றி ஒரே சமூகத்தவராக Idea குரூப் கருதுகின்றது. 

அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள கத்தோலிக்க மக்களுக்கு தமது நிர்வாகம் மற்றும் சகல ஊழியர்களும் ஆழந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக பேராயரிடம் Idea குரூப் லிமிடெட் தலைவர் சம்பத் மாயாகடுவ தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .