2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுசூகி CELERIO X இலங்கையில் அறிமுகம்

Editorial   / 2018 மார்ச் 28 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசோசியேட்டட் மோட்டர்வேஸ் (பிரைவேட்) லிமிட்டட், அண்மையில் Suzuki CelerioX கார்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது.   

பெரும்பாலான hatch-to-cross மாற்றங்களைப் போலவே CelerioX பக்கவாட்டிலும் பின்புறத்திலும் மிகச்செறிவான cladding ஐக் கொண்டுள்ளது. பின்புற bumper வெள்ளி நிறத்திலான skid plate ஆல் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. Grille மற்றும் முன்புற விளக்குகளின் கீழ் அமைந்துள்ள பளபளப்பான கறுப்பு நிற சிறப்பம்சங்கள் தனித்தன்மையை வழங்கும் அதேநேரம், கூரைப்பகுதி SUV இன் தோற்றத்தைத் தருகிறது.  

உட்புறப்பகுதி முழுமையாக கறுப்பு நிறத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள அதேநேரம், சில இடங்களிலுள்ள வெள்ளை நிற அழுத்தங்கள் அழகிய தோற்றப்பாட்டையும் தருகிறது. கறுப்பு நிற ஆசனங்களில் சிறப்பாக அமைந்துள்ள வர்ணம், வாகனத்தின் வெளிப்புற வர்ணத்துடன் சிறப்பான முறையில் பொருந்துகிறது. 

Steering-mounted controls உடனான இரட்டை DIN audio system உட்பட அதன் சிறப்பம்சங்களின் பட்டியல் நீளமானது. CelerioX இல் சாரதி மற்றும் முன் ஆசனத்திலுள்ள பயணிக்கு பாதுகாப்பை வழங்கக்கூடிய airbags மற்றும் anti-lock brake system (ABS) என்பன உயர்ந்த பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றன. Suzuki CelerioX, 5-speed automated manual transmission (AMT) powered by the frugal and gutsy K-Next series 1.0- லீற்றர், three-cylinder, மற்றும் நிலையான Celerioவைப் போன்ற petrol engine என்பவற்றைக் கொண்டுள்ளது. . Alloy wheels மற்றும் fog lamps உடனும் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். உயர்ந்த தரங்களுடன் இவ்வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

கவர்ச்சிகரமான 5 நிறங்களில் இப்பொழுதே இவ்வாகனத்தை முன்பதிவு செய்துகொள்ள முடியும். அதேநேரம் AMW ஆல் சான்றளிக்கபட்ட பிரிவான Automall ஊடாக, வாடிக்கையாளர்கள் தங்களுடைய தற்போதைய வாகனத்தை, Suzuki CelerioX-ZXI (O) உடன் பரிமாற்றம் செய்துகொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .