2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

செலான் வங்கி முதல் காலாண்டில் உயர் நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

Editorial   / 2020 ஜூன் 20 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவால்மிக்க சந்தை நிலைமைகளுக்கு மத்தியிலும் 2020இன் முதலாம் காலாண்டில் வரிக்குப் பின்னரான இலாபமாக, ரூபாய் 902 மில்லியனை செலான் வங்கி பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

2020இன் முதலாம் காலாண்டில் தேறிய வட்டி வருமானம் 7.28% இனால் அதிகரித்துள்ள அதேநேரத்தில், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூபாய் 966 மில்லியனாகக் காணப்பட்ட மய்ய வங்கியியல் தொழிற்பாடுகளில் இருந்தான தேறிய கட்டணம், தரகு வருமானம் 2020இன் முதலாம் காலாண்டில் ரூபாய் 986 மில்லியனாக 2% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

வணிக நடவடிக்கைகளில் இருந்தான தேறிய வருவாய்கள், நிதிக் கருவிகளின் நியாயப் பெறுமான மாற்றங்கள், வெளிநாட்டு நாணயமாற்று பரிவர்த்தனையில் இருந்தான தேறிய பெறுகைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஏனைய வருமானத் தலைப்புகள், ஏனைய தொழிற்பாட்டு வருமானம் ஆகியவை 2019இன் முதலாம் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ. 368 மில்லியன் தேறிய வருவாயுடன் ஒப்பிடுகையில், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இக்காலாண்டு காலப்பகுதியில் ரூ. 415 மில்லியன் தேறிய வருவாயாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2020இன் முதலாம் காலாண்டுக்கான 'மதிப்பிறக்கச் செலவுகள்' ரூ. 1,116 மில்லியன் ஆகும். 2019இன் முதலாம் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ. 589 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 89.41% அதிகரிப்பாகக் காணப்படுகின்றது.

கடந்த வருடத்தின் முதமலாம் காலாண்டில் ரூ. 3,098 மில்லியனாகப் பதிவு செய்யப்பட்டிருந்த வங்கியின் மொத்தச் செலவுகள், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இக் காலாண்டில் ரூ. 3,261 மில்லியனாக 5.27% அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .