2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

செலிங்கோ லைஃவ் நீண்ட கால ஊழியர்களுக்கு கௌரவிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலிங்கோ லைஃவ் தனது நிறுவனத்தில் நீண்ட காலமாக பணியாற்றிய 537 ஊழியர்களை கௌரவித்துள்ளது. 10 வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் பணிவு மிக்க சேவைகளை வழங்கிய நிரந்தர ஊழியர்களே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.

ஐந்து வகைப்படுத்தலின் கீழ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கான சின்னங்கள் மற்றும் பணப்பரிசில்கள் வழங்கப்பட்டன. ஆயுள் காப்புறுதி தலைவரான செலிங்கோ லைஃவ் நிறுவனம் இவ்வாண்டு ஆரம்பத்தில் அதன் 30 வருட நிறைவைக் கொண்டாடியதைக் குறிக்கும் வகையில் ‘30 வருட பராமரிப்பு’ எனும் தொனிப் பொருளின் கீழ் கம்பனியில் 30 வருட சேவையைப் பூர்த்தி செய்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர். செலிங்கோ காப்புறுதியின் தலைவர் கொட்வின் பெரேரா இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.  

10 முதல் 14 வருட சேவைகளைப் பூர்த்தி செய்தவர்கள் பிரிவில் 184 பேர் கௌரவிக்கப்பட்டனர். 15 முதல் 19 வருட பிரிவில் 128 பேரும், 20 முதல் 24 வருட பிரிவில் 120 பேரும், 25 முதல் 29 வருட பிரிவில் 101 பேரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். மூன்று பணிப்பாளர்களும் ஒரு ஊழியரும் 30 வருடங்களுக்கு மேற்பட்ட சேவைகளை வழங்கியமைக்காக நீண்ட கால சேவை விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.  

“ஆயுள் காப்புறுதிக்கான எமது தொனிப் பொருள் ‘ஆயுளுக்கான உறவு’ என அமைந்திருப்பது தெளிவாக எமது ஊழியர்களுக்கும் பிரயோகிக்கக் கூடியதாக அமைந்துள்ளது“ என்று செலிங்கோ லைஃவ் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆர். ரெங்கநாதன் கூறினார். “குறிப்பாக நிதிச் சேவையில் நிலைத்தன்மை ஒரு முக்கியமான ஒழுக்கமாகக் காணப்படுகின்றது. அதிலும் இவ்வளவு பெரிய தொகையான ஊழியர்களைக் கொண்டு 20 வருடங்களுக்கு மேல் சேவை செய்வதென்பது கநிறுவனத்தில் மிகவும் அனுபவம் மிக்க அதிகாரிகள் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டுவது மட்டும் அல்லாமல், அத்தோடு ஒட்டு மொத்த கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளையும் பின்பற்றுவதில் ஒரு சீரான போக்கு காணப்படுகின்றது என்பதையும் அது புலப்படுத்தி நிற்கின்றது” என்று அவர் மேலும் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .