2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘துறுணு திரிய’ ஊடாக 290 கடன்கள் வழங்கி​​ வைப்பு

Editorial   / 2018 நவம்பர் 23 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வங்கியின் ‘துறுணு திரிய’ கடன் திட்டத்தின் கீழ் கடந்த வாரம் வரை 290 இளம் தொழில்முனைவோருக்கு ரூ.125,458,000.00 வரையான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னைய வாரத்துடன் ஒப்பிடும் போது, இது 10% வளர்ச்சி​யைக் காண்பித்துள்ளது என, இலங்கை வங்கியால் வெளியிடப்பட்ட, இலங்கை வங்கியின் ‘துறுணு திரிய’ கடன் திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான வாராந்த முன்னேற்ற மீளாய்வு அறிக்கையிலேயே இத்தரவுகள் வெளியிடப்பட்டிருந்தன.

மாகாண ரீதியான கடன் வழங்கலில் மேற்கு, சப்ரகமுவ, தென் மாகாணங்கள் முறையே 54,52,44 கடன்களை வழங்கி முன்னிலை வகிக்கும் அதேவேளை, மாவட்ட ரீதியிலான கடன் வழங்கலில் இரத்தினபுரி, களுத்துறை, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் முறையே 42,23,22 கடன்களை வழங்கி இதுவரை முன்னிலை வகிக்கின்றமையை இத்தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

இந்த விசேட கடன் திட்டம், இளம் தொழில்முனைவோ​ரை  மேம்படுத்தும் நோக்கோடு, இலங்கையிலுள்ள மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் என்பவற்றின் ஒருங்கிணைப்போடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

‘துறுணு திரிய’; கடன் திட்டம், இலங்கையின் அனைத்து மூலைகளிலும் அழகுக்கலை, மோட்டார் வாகன திருத்தம், ஆடைத்தொழில், தகவல் தொழில்நுட்பம், விவசாயம் போன்ற வெவ்வேறு வணிகத்துறைகளில் ஈடுபட்டு வருகின்ற இளம் தொழில்முனைவோருக்குக் கடன்களை வழங்கி வருகின்றது. 

இலங்கை வங்கியின் ‘துறுணு திரிய’ கடன் திட்டத்தின் கீழ், 3 வருடங்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்ற பட்டதாரிகள், ஏற்றுக்கொள்ளத்தக்க தொழில்சார் தகைமைகளைக்கொண்ட 40 வயதுக்குட்பட்ட  தொழில் முனைவோருக்குப் பிணைகளற்ற/இலகுபடுத்தப்பட்ட பிணைகளின் கீழ் கடன்கள் வழங்கப்படுகின்றன.  

இக்கடன்திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கை வங்கியின் அனைத்துக் கிளைகள், அனைத்துப் பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .