2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நிஸான் தலைவரை பணியிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை

Editorial   / 2018 நவம்பர் 21 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிஸான் தலைரான கார்லோஸ் கோஸ்ன், நிறுவனத்தின் நிதியை தனது தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தியுள்ளதாகவும், மேலும் பல முறைகேடான செயற்பாடுகளில் நிறுவனத்தில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டு, அவரை பணியிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ரொய்டர் செய்திச் சேவை அறிவித்துள்ளது.   

நிஸானின் பிரான்ஸ் நாட்டு பங்காளரான ரெனோல்ட் நிறுவனத்தின் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கார்லோஸ் கோஸ்ன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜப்பானிய செய்திச் சேவைகள் அறிவித்துள்ளன.   

இவருடன் நிறுவனத்தின் பிரதிநிதி பணிப்பாளரான கிரெக் கெலி ஆகியோர் பல மாத காலமாக இவ்வாறான முறைகேடான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளமை தொடர்பில் தமக்கு அறிக்கை கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கோஸ்ன் மற்றும் கெலி ஆகியோரை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதிலும் அவர்களுடன் எவ்விதமான தொடர்புகளை ஏற்படுத்த முடியவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

இதன் காரணமாக ரெனோல்ட் நிறுவனத்தின் பங்குகள் 13 சதவீத சரிவையும், ஐரோப்பாவில் பட்டியலிடப்பட்டுள்ள நிஸான் பங்குகள் 12 சதவீத சரிவையும் பதிவு செய்திருந்தன.   

நிஸான் நிறுவனத்தின் திவாலாகும் நிலையிலிருந்து மீட்டிருந்த வெளிநாட்டு பிரஜை எனும் பெருமையை கோஸ்ன் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .