2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பண்டிகைக்கால விற்பனைகள் எதிர்பார்த்ததை விட உயர்வு

Editorial   / 2019 ஜனவரி 06 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து செல்லும் நிலையில், டிசெம்பர் மாதத்தில் பண்டிகைக்கால விற்பனைகள், எதிர்பார்த்ததை விட உயர்வாக அமைந்திருந்ததாக, இலங்கை விற்பனையாளர்கள் சம்மேளனத்தின் ஸ்தாபகர் ஹுஸைன் சாதிக் தெரிவித்தார்.  

“நாம் டிசெம்பர் மாத விற்பனைகள், மந்த கதியில் அமைந்திருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனாலும், பொது மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் பெருமளவு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர். முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த டிசெம்பர் பருவ கால விற்பனைகள் நிகரானவையாக அமைந்திருந்தன. சில தினங்களில், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், விற்பனைகள் உயர்வாக பதிவாகியிருந்தன. டிசெம்பர் மாதத்தின் முற்பகுதியில், நாம் பெருமளவு அச்சத்தைக் கொண்டிருந்தோம். பொது மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபடுவதில் பெருமளவு அக்கறை செலுத்தமாட்டார்கள் எனக் கருதினோம். நாட்டின் அரசியல் நெருக்கடி நிலையும், இதில் தாக்கம் செலுத்தக்கூடும் என எண்ணினோம். ஆனாலும், மாறாக 2018 டிசெம்பர் பண்டிகைக்கால விற்பனைகள் வழமை போல இடம் பெற்றமை மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.  

இதேவேளை, ஆர்பிகோ சுப்பர் சென்டர்களின் செயற்பாட்டாளரான ரிச்சர்ட் பீரிஸ் டிஸ்ரிபியுட்டர்ஸ் லிமிடெட் பொது முகாமையாளர் கே.ஏ.எஸ். லசந்த கருத்துத் தெரிவிக்கையில், “டிசெம்பர் மாதத்தை பொறுத்தமட்டில் நாம் எதிர்பார்த்ததை விட உயர்ந்த பெறுமதிகள் பதிவாகியிருந்தன. எமது இலக்குகளை நாம் எய்தியுள்ளோம். எதிர்பார்த்ததைப் போன்று விற்பனையில் பாரிய பின்னடைவுகள் எதுவும் ஏற்படவில்லை. கடந்த டிசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை பாரிய பின்னடைவு அல்லது வீழ்ச்சி எதுவும் ஏற்படவில்லை.” என்றார்.  

டிசம்பர் மாத விற்பனை தொடர்பில் தம்மால் உடனடியாக கருத்துக் குறிப்பிட முடியாது என சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பிஎல்சி சந்தைப்படுத்தல் குழும பணிப்பாளர் டேசிரி கருணாரட்ன குறிப்பிட்டார். “டிசெம்பர் மாத பெறுபேறுகள் தொடர்பில் குறிப்பிட சற்று காலம் தேவைப்படும். ஆனாலும், இதை விட சிறந்த பெறுபேறுகள் பதிவாகியிருந்தால் சிறப்பானதாக அமைந்திருக்கும். குறிப்பாக இலத்திரனியல் பொருட்கள் துறை சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்யும் என நாம் எதிர்பார்க்கிறோம்” என்றார்.   

அபான்ஸ் குழுமத்தின் பதில் பணிப்பாளர் தினேஷ் பெரேரா குறிப்பிடுகையில், “டிசெம்பர் பண்டிகைக்கால விற்பனைகள் மோசமாக அமைந்திராத போதிலும், இந்தப் பெறுபேறுகளை விட உயர்ந்த பெறுபேறுகளை நாம் எதிர்பார்த்திருந்தோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .