2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு - கல்வியமைச்சு உடன்படிக்கை

Editorial   / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவும் கல்வியமைச்சும் இணைந்து, நிதியியல் கல்வியை மும்மொழியிலும் முறைமைப்படுத்தி, ஆசியர்களுக்கும் மாணவர்களுக்கும் சிறந்த முறையில் வழங்குவதற்காக அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டன.    

கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சியும் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் வஜிர விஜேகுணவர்த்தனவும் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.

நிதியியல் கல்வியானது அறிவு, திறமை மற்றும் திறன்களை உள்ளடக்கியதாகும். பல ஆண்டுகளாக இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு, மூலதனச்சந்தை அறிவை அனைத்துப் பிரிவினரையும் சென்றடையத் தன்னாலான பங்களிப்பை வழங்கி வருகின்றது.  

இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் நோக்கங்களில் ஒன்றான நிதியறிவை வழங்குதல் கருப்பொருளானது பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. மேலும், மூலதனச்சந்தை பாடத்திட்டமானது க.பொ.த சாதாரண தரத்தில் வணிகம் மற்றும் கணக்கு பாடத்திட்டத்திலும் க.பொ.த உயர்தர வணிகக்கல்விப் பாடத்திட்டத்திலும் உள்ளடங்கியுள்ளது.  இம்மாணவர்களுக்கு மூலதனச்சந்தை கல்வி, முறையாகச் சென்றடைய இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு தன்னாலான முயற்சியை மேற்கொள்ளும்.

இவ் ஒப்பந்தமானது தேசிய கல்வி நிறுவகத்துடன் இணைந்து மூன்று வருடகாலப்பகுதிக்குள் இலங்கையில் உள்ள 98 கல்வி வலயங்களில் உள்ள மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மூலதனச் சந்தை கல்வி தொடர்பான செயலமர்வுகளை நடத்த எதிர்பார்த்துள்ளது. 2018இல் மாத்திரம் 32 கல்வி வலயங்களுக்கு இத்திட்டத்தை செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக அடிப்படை நிதியியல் கல்வியானது மேலும் பல தரங்களுக்கான பாடத்திட்டங்களுக்குள் உள்வாங்க எதிர்பார்க்கப்படுவதுடன் தற்போது காணப்படும் பாடத்திட்டமும் புதுப்பிக்கப்படும். அத்துடன் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு உயர்தர  வணிகக் கல்வி மாணவர்களுக்கு ஒரு கையேட்டை வெளியிடவும் மாணவர்களுக்கான வினா விடை போட்டி ஒன்றையும் அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்ப எதிர்பார்த்துள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நிதியியல் கல்வியை கல்வியமைச்சுடன் இணைந்து வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .