2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மாணவர்களுக்கு SLIIT School of Architecture அழைப்பு

Gavitha   / 2020 ஒக்டோபர் 29 , பி.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLIIT இனால் வழங்கப்படும்  கட்டடக்கலையில் BSc (Hons) பட்டப்படிப்பு 3 வருடங்களில் முழுநேரமாக பூர்த்தி செய்யக்கூடியது. இந்தப் பட்டத்தை Liverpool John Moore’s University (LJMU) UK வழங்குவதுடன், இந்தக் கற்கையை Royal Institute of British Architects (RIBA)முழுமையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இந்த கற்கையினூடாக, தரமான கல்வியை குறுகிய காலத்தில் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்பதுடன், சர்வதேச தர நியமங்களுக்கமைவாக இந்த கற்கை அமைந்துள்ளது.

பின்பற்றுகை, உரிய காலப்பகுதியில் தீர்மானமெடுத்தல்கள் மற்றும் பொறுப்பான தலைமைத்துவம் ஆகியன அத்தியாவசியமான திறன்களாக அமைந்துள்ளதுடன், கற்கை மற்றும் தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றுக்கு அப்பால் மாணவர்களுக்கு இவற்றை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை SLIIT மேற்கொள்கின்றது. இலங்கையில் மார்ச் மாதம் முதல் கொவிட்-19 தொற்றுப் பரவல் ஆரம்பித்துள்ள நிலையில், மாணவர்களை தமது இருப்பிடங்களிலிருந்து இணையத்தினூடாக கற்கைகளை தொடர்வதற்கு அவசியமான வழிகாட்டல்களை SLIIT வழங்குவதனூடாக இது மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆக்கபூர்வமான, புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் கல்வி நிலையமாக SLIIT School of Architecture அமைந்திருப்பதுடன், மாணவர்களுக்கு தமது கல்வியை தொடரக்கூடிய வகையில் ஒன்லைனில்  விரிவுரைகள், விளக்கங்கள் மற்றும் பரீட்சைகள் கூட முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் அவர்களின் கற்றல் செயற்பாடுகள் தடங்கல்களின்றி தொடர்கின்றன.

உரிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக, இறுதியாண்டில் பயிலும் SLIIT மாணவர்களுக்கு தமது கற்கைகளை 2020 செப்டெம்பர் முதல் வாரத்தில் ஏற்கனவே திட்டமிட்டதற்கமைய பூர்த்தி செய்ய முடிந்தது. இந்த மாணவர்களுக்கு துறையில் பெருமளவு வரவேற்பு காணப்படுவதுடன், முன்னணி கட்டடக்கலை நிறுவனங்களில் பணிக்கும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு வருட காலப்பகுதிக்கு துறைசார் பயிற்சியை தொடர்ந்து, அவர்களுக்கு SLIIT இல்,  2 வருட பட்டப்பின்படிப்பு MSc கற்கையை தொடர முடியும். இந்தப் பட்டத்தை பொதுநலவாய பல்கலைக்கழகங்களின் சம்மேளனத்தின் அங்கத்துவ பல்கலைக்கழகமான LJMU வழங்குகின்றது. இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தையும் இந்தக் கற்கைநெறி கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .