2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் ஹேமாஸ் ட்ராவல்ஸ்

Editorial   / 2018 மார்ச் 14 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு பயண முகவரகமாகத் திகழும் ஹேமாஸ் ட்ரவல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட், யாழ்ப்பாணத்துக்குத் தனது வணிக செயற்பாடுகளை விஸ்தரித்திருக்கின்றது. சர்வதேச வான்வழிப் போக்குவரத்து அதிகார சபையின் (IATA) அங்கிகரிக்கப்பட்ட ஒரு பயண முகவர் நிறுவனமான இது, 1979ஆம் ஆண்டிலிருந்து சிறப்பாகத் தொழிற்பட்டு வருகின்றது. 

கடந்த வருடத்தின் இறுதியில் கண்டியில் தனது கிளையை திறந்து வைத்ததன் மூலம், அப்பகுதியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய அதேநேரத்தில், மிகக் குறுகிய காலத்துக்குள் கொழும்புக்கு வெளியிலான இரண்டாவது கிளையை இப்போது யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்ததன் மூலம் இன்னுமொரு முத்திரையையும் பொறித்திருக்கின்றது.  

இலக்கம் 14, யாழ் - பருத்தித்துறை வீதியில் மூலோபாய அடிப்படையில் அமைந்திருக்கின்ற இப்புதிய காட்சியறையானது முற்பகல் 8.30 தொடக்கம் பிற்பகல் 5.30 வரை திறந்திருப்பதுடன், இங்கு பயிற்றப்பட்ட, அனுபவமுள்ள தமிழ்மொழி பேசக்கூடிய ஊழியர்கள் கடமையில் இருப்பார்கள்.

இந்தக் கிளை பல்வேறுபட்ட முழுமையான பயணம்சார் தீர்வுகளை வழங்கும். அனைத்து விமான சேவைகளிலும் விமானப் பயணச்சீட்டு பெறுதல், ஹோட்டல் விடயங்களைக் கையாளல், வெளிநாட்டு விடுமுறைகால பயணப் பொதிகள், பயணிகள் கப்பல் சேவை, பயணப் பேரூந்து சுற்றுலாக்கள், விசா கையாளல் போன்ற பல சேவைகளை இக்கிளை வழங்கும்.

அத்துடன் வழக்கமான கடமை நேரத்துக்கு அப்பால் வாரத்தின் 7 நாட்களும் 24 மணித்தியாலமும் மேற்படி கிளைகள் சேவை வழங்குகின்றன.  

“வளர்ச்சியடைந்து வரும் நகரமான யாழ்ப்பாணத்தில் காலடி பதிப்பதையிட்டு நாம் பெருமிதம் அடைகின்றோம். நாம் வழங்கி வருகின்ற குறுங்கால மற்றும் நீண்டகால விஜயங்கள் மற்றும் விடுமுறைகால பயண சேவையின் பயனாக அதிகமான குடும்பங்கள் வெளிநாடுகளில் உள்ள தங்களது உறவினர்களுடன் உறவைப் புதுப்பித்துக் கொண்டுள்ளார்கள். வடக்கில் இருந்து பெருமளவிலான மாணவர்கள் வெளிநாட்டில் கல்வியைத் தொடர்வதற்காகச் செல்கின்றார்கள் என்பதை புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள ஹேமாஸ் ட்ரவல்ஸ் கிளையானது அனைவருக்கும் அனுகூலமளிப்பதாக காணப்படுகின்றமையால் வெளிநாட்டுப் பயணத்துறை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்ற வாய்ப்புகள் எதிர்பார்ப்புகள் மற்றும் கேள்வியை விஞ்சியதாகக் காணப்படுகின்றது. தனது பரந்துபட்ட சேவையுடன் இணைந்ததாகத் தற்போது நாட்டின் மிக முக்கியமான ஒரு பிரதேசத்துக்கு சேவையை விஸ்தரித்திருக்கின்ற ஹேமாஸ் ட்ரவல்ஸ் நிறுவனம் பயண நடைமுறைகளை இலகுவாக்கி இருக்கின்றது” என்று ஹேமாஸ் ட்ரவல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் சிரேஷ்ட முகாமையாளர் ஹேஷான் பெரேரா தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .