2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் நிதிப்பெறுபேறுகள் முன்னேற்றம்

Editorial   / 2018 நவம்பர் 14 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்ததுடன், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகர வழங்கிய காப்புறுதி தவணைக்கட்டண வளர்ச்சியாக 9% ஐ பதிவு செய்திருந்தது. 

இக்காலப்பகுதியில் முதலீடுகளினூடாக பெறப்பட்ட வருமானம் 13% இனால் அதிகரித்து 3036 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் செலவீனங்கள் அதிகமாக காணப்பட்ட போதிலும், வியாபாரத்தின் நீண்ட கால தேவைகளை கவனத்தில் கொண்டு அவை செலவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

வரிக்குப் பிந்திய இலாபம் 2,242 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. 2017ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி 267 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. புதிய வரி விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, 2017ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரிச் சட்ட இல. 24 இன் 67 ஆம் பிரிவின் பிரகாரம், 2018 டிசம்பர் 31 ஆம் திகதியிலிருந்து வரி செலுத்த வேண்டிய வருமானத்தை கொண்டிருக்கும். இதனூடாக 6 வருட காலப்பகுதியினுள் நிறுவனம் பதிவு செய்திருந்த வரி இழப்புகளை தனது வரிக்குட்பட்ட வருமானத்தில் சீராக்கம் செய்ய வாய்ப்புக் கிடைத்திருந்தது.  

மீளாய்வுக்குட்ப டுத்தப்பட்ட காலாண்டில், வரிச் சொத்துக்களின் பெறுமதி 1532 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. 2017 டிசம்பர் 31ஆம் திகதி முன்கொணரப்பட்டிருந்த வரி இழப்புகளின் காரணமாக இந்தப் பெறுமதி பதிவாகியிருந்தது.  

3ஆம் காலாண்டு வரையிலான இலாபத்தில் ஆயுள் வியாபாரத்தின் மேலதிக பெறுமதிகள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், இந்தப் பெறுமதி வருட இறுதியில் கணிப்பிடப்பட்டு உள்ளடக்கப்படும்.  

ஆரோக்கியமான திரள்வு விகிதத்துடன், 2018 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று ஆயுள் நிதியத்தின் பெறுமதி 31 பில்லியன் ரூபாயாக பதிவு செய்து, நிதி உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .