2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’178 பேர் தனிமையில்’

Editorial   / 2020 ஜூலை 05 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில், பளை ஆகிய தனிமைப்படுத்தல் மய்யங்களில், வெளிநாடுகளிலிருந்து அழைத்துவரப்பட்ட 178 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, கிளிநொச்சி பிராந்திய தொற்றுநோயியல் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில், நாளைய தினம் (06), பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் சுகாதார நிலைமைகள் பற்றி கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், லெபனான் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட 74 பேர் இயக்கச்சியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் மய்யத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனரென்றார்.

அத்துடன், வியட்நாம், மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 104 பேர் முழங்காவில் தனிமைப்படுத்தல் மய்யத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனரெனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .