2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

87 வர்த்தகர்களுக்கு நோட்டீஸ்

Editorial   / 2017 நவம்பர் 13 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன் 

கிளிநொச்சி - கனகபுரம் வீதியில் அமைந்துள்ள வர்த்தகர்கள் 87 பேருக்கு, கரைச்சி பிரதேச சபையால், இன்று (13) இறுதி அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

கனகபுரம் வீதியில், வீதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அதனை, இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அகற்ற வேண்டும் எனவும் அறிவிக்கும் கடிதமே, பிரதேச சபையால் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த வீதியானது, 30 மீற்றர் அகலமுடையது. அதன் இரு புறங்களிலும் உள்ள வியாபாரிகள், தங்களின் வியாபார நடவடிக்கைகளை வீதியின் மத்தியிலிருந்து 15 மீற்றருக்கு (சுமார் 50 அடிக்கு) அப்பால் மேற்கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலான வியாபாரிகள் வீதிக்கு மிக மிக அருகிலேயே தங்களின் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

வாகனங்களில் பயணிப்பவர்கள், தங்களுடைய வாகனங்களிலிருந்து இறங்காது வீதியில் நின்றபடியே பொருட்களைக் கொள்வனவு செய்யுமளவுக்கு வியாபார நிலையங்கள் காணப்படுகிறன. இது போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாக இருப்பதோடு, வடிகாலமைப்பை மேற்கொள்ள முடியாத நிலைமையையும் ஏற்படுத்தியுள்ளது.  

அத்தோடு, எதிர்கால நகரின் திட்டமிடலுக்கும் அபிவிருத்திக்கும் பெரும் தடையாகவும் இவ்வியாபார நடவடிக்கைகள் காணப்படுகிறன என, பலதரப்பினர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டது. 

இந்நிலையில், கரைச்சி பிரதேச சபை அதிகாரிகளுக்கும் குறித்த 87 வியாபாரிகளுக்கும் இடையில், 2016-05-04, 2016-12-24, மற்றும் 2017-07-30 ஆகிய தினங்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று, வியாபாரிகளுக்கான அறிவித்தல்களும் விடுக்கப்பட்டன. இதன் இறுதி அறிவித்தலே, தற்போது விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .