2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அக்கராயன், இரணைமடுக்குளம் நுளம்புகள் குறித்து ஆய்வு

Editorial   / 2018 ஜூன் 11 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பூச்சியல் ஆய்வு நடவடிக்கையின் கீழ், அக்கராயன், இரணைமடுக்குளம் ஆகிய பகுதிகளில் மலேரியா பரவக்கூடிய வகையில் காணப்படுகின்ற நுளம்புகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி வருவதாக, மலேரியா தடை இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ம.ஜெயராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில், அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மலேரியாவை முற்றாக தடைசெய்யும் வகையில், கிளிநொச்சி மாவட்டத்தில், மலேரியா தடுப்பு தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், அதன் ஓர் அங்கமாக, மாதாந்தம் 3,000 பேருக்கு மலேரியா தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதைவிட மேலதிகமாக, வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், வெளிநாடுகளுக்குச் செல்வோர், இந்தியாவில் இருந்து மீளத்திரும்புவோர் ஆகியோருக்கும் மலேரியா தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .