2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இடை நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் ஆரம்பம்

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில் இடைநிறுத்தப்பட்ட மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் , மீண்டும்  இன்று   (18) ஆரம்பிக்கப்பட்டன.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இடமாற்றம் பெற்று மல்லாகம் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்துக்கு புதிய நீதிபதியாக ஹெப்பட்டிக்கொல்லாவ மாவட்ட நீதிபதி ரி.ஜெ.பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (14) இடை நிறுத்தப்பட்ட அகழ்வு பணிகள், இன்று (18) காலை 7.30 மணியளவில் 15 ஆவது தடவையாகவும் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.

விசேட சட்ட வைத்திய நிபுணர் டப்ள்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, களனி  பல்கலைக்கழக தொல்பொருள் அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்கள், பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் பல் நிபுணத்ததுவ வைத்திய அதிகாரி, களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ்சோம தேவா ஆகியோர் அடங்கியிருந்தனர்.

இவர்களுடன் இணைந்து விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்ச்சியாக அகழ்வு பணிகளின் போது மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இன்று (18) மாலை 4.45 மணியளவில் மன்னார் மாவட்ட புதிய நீதவான் ரி.ஜே.பிராபாகரன் குறித்த பகுதிக்குச் சென்று அகழ்வு பணிகளை நேரடியாக பார்வையிட்டதோடு, விசேட சட்ட வைத்திய நிபுணர் டப்ள்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமையிலான குழுவினருடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .