2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்தியத் துணைத்தூதுவருடன் யாழ். கட்டளைத் தளபதி சந்திப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீப்

புதிதாகக் கடமைகளைப் பொறுப்பேற்ற இந்திய கொன்சிலேட் ஜெனரல் எஸ்.பாலச்சந்திரனுக்கும் இராணுவத்தின் யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று, பலாலியில் அமைந்துள்ள கட்டளைத் தலைமையகத்தில், நேற்று (23) இடம்பெற்றது.

யுத்தத்தின் பின்னர், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டங்களில், இராணுவத்தின் பங்களிப்பு தொடர்பில், இந்திய கொன்சிலேட் ஜெனரலுக்கு, தெளிவுபடுத்தப்பட்டது.

அத்துடன், இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு, இதுவரை விடுவிக்கப்படாமலுள்ள காணிகளை, தொடர்ச்சியாக இராணுவம் விடுவித்து வருகின்றைமை தொடர்பில், யாழ். கட்டளைத் தளபதியால் விளக்கப்படுத்தப்பட்டதை அடுத்து, அதற்கு, இந்தியக் கொன்சிலேட் ஜெனரல், தனது பாரட்டைத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .