2024 மே 14, செவ்வாய்க்கிழமை

இரணைமடுக்குளத்தை திறக்க ஜனாதிபதியை அழைத்து வர நடவடிக்கை

Editorial   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்

இரணைமடுகுளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போது நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஜனாதிபதியை அழைத்து வந்து திறப்பதுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி இரணைமடுகுளத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே இன்று (05) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2178 மில்லியன் ரூபாய் செலவில்   புனரமைக்கப்பட்டு இரண்டு வருடங்களின் பின் குளத்தின் நீர் கொள்ளளவு முழுமையை எட்டியுள்ள நிலையில், ஆளுநர் றெஜினோல்ட் கூரே விஜயம் செய்து நிலைமைகளை நேரில் ஆராய்ந்துள்ளார்.

இரணைமடுகுளத்தின் கொள்ளளவு புனரமைப்புக்கு முன்னர் 34 அடியாக  காணப்பட்டது. தற்போது 36 அடியாக காணப்படுகிறது. தற்போது இரணைமடுகுளத்தின் நீர் மட்டம் 35.4 அடியாக காணப்படுகிறது.

குளத்தை பார்வையிட்ட பின் கருத்து தெரிவித்த ஆளுநர்,

தற்போது குளத்தின் நிலைமைகளை பார்வையிடுவதற்காவே வருகை தந்துள்ளேன். குளத்தின் நீர் மட்டம் அதன் வான் பாயும் அளவை இன்னமும் அடையவில்லை. இது தொடர்பில் மாவட்ட செயலருடன் இணைந்து நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அறிவித்தல்களை பெற்று அதற்கமைவாக ஜனாதிபதியை  அழைத்து வந்து திறப்பதுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .